தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கப்பல்கள் வருவது நிறுத்தம் தாருக்கு தட்டுப்பாடு வருமா?

 கப்பல்கள் வருவது நிறுத்தம் தாருக்கு தட்டுப்பாடு வருமா?

 கப்பல்கள் வருவது நிறுத்தம் தாருக்கு தட்டுப்பாடு வருமா?


ADDED : மார் 10, 2026 05:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 05:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மங்களூரு: ஈரான் - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான போரால், கார்வார் துறைமுகத்திற்கு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் தார், கச்சா எண்ணெய் சுமந்து வரும் கப்பல்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால், தார், கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.

கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உத்தர கன்னடாவின் கார்வாரில் துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்திற்கு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து தார், கச்சா எண்ணெய் போன்றவை கப்பல்களில் மாதத்திற்கு ஒரு முறை அனுப்பி வைக்கப்படும்.

இந்நிலையில், ஈரான் - இஸ்ரேல் நாடுகள் இடையே நடைபெறும் போரால், மத்திய கிழக்கு நாடுகள் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால், அந்த நாடுகளில் இருந்து கார்வாருக்கு கப்பல்கள் வருவது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தார், கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

கப்பல்கள் மூலம் டீசல் கொண்டு வருவதும் நிறுத்தப்பட்டு உள்ளதால், கார்வாரில் உள்ள கடம்பா கடற்படை தளத்திற்கு தேவையான டீசல், மும்பையில் இருந்து கப்பல்களில் கொண்டு வரப்படுகிறது.

கப்பல்கள் வராததால் துறைமுகத்தை நம்பி தொழில் செய்யும் லாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் சிக்கலில் சிக்கி உள்ளனர்.

துறைமுகம் முன் லாரிகள் நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. துறைமுக நிர்வாகத்திற்கும், 70 லட்சம் முதல், 80 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us