/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கூப்பாடு போட்டால் நியாயம் கிடைக்குமா? மேல்சபையில் பா.ஜ., விஸ்வநாத் கேள்வி
/
கூப்பாடு போட்டால் நியாயம் கிடைக்குமா? மேல்சபையில் பா.ஜ., விஸ்வநாத் கேள்வி
கூப்பாடு போட்டால் நியாயம் கிடைக்குமா? மேல்சபையில் பா.ஜ., விஸ்வநாத் கேள்வி
கூப்பாடு போட்டால் நியாயம் கிடைக்குமா? மேல்சபையில் பா.ஜ., விஸ்வநாத் கேள்வி
ADDED : ஜன 31, 2026 05:15 AM

பெங்களூரு: ''ஜி.எஸ்.டி., பங்கு வரவில்லை என்று கூப்பாடு போட்டால், நியாயம் கிடைக்குமா,'' என பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் காரசாரமாக தெரிவித்தார்.
மேல்சபையில் கேள்வி நேரத்தில் நேற்று நடந்த விவாதம்:
காங்., - ஐவான் டிசோசா: மத்திய அரசால் நமக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திட்டங்கள், ஜி.எஸ்.டி., யில் பங்கு அளிப்பது உட்பட பல விஷயங்களில், பிரதமர் மோடி அரசு கர்நாடகாவுக்கு அநீதி இழைத்துள்ளது.
பா.ஜ., - விஸ்வநாத்: மத்திய அரசால் அநியாயம் நடந்துள்ளது என்று கூப்பாடு போட்டால், உங்களுக்கு நியாயம் கிடைத்து விடுமா. நிதித்துறையை வைத்துள்ள முதல்வர் சித்தராமையா, எத்தனை முறை ஜி.எஸ்.டி., கவுன்சலிங் கூட்டத்துக்கு சென்றார்.
விஸ்வநாத்தின் பேச்சுக்கு, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு எதிர்க்கட்சியினரும் பதிலடி கொடுத்து, மாநில அரசை கண்டித்தனர்.
விஸ்வநாத்: நான் எந்த அரசையும் குறிவைத்து விமர்சிக்கவில்லை. நிதித்துறை அமைச்சரான முதல்வர் சித்தராமையா, ஜி.எஸ்.டி., கவுன்சலிங் கூட்டத்துக்கு சென்று, மாநிலத்துக்கு ஏற்படும் பாதிப்பை பற்றி பேசியிருக்க வேண்டும். கூட்டத்துக்கே செல்லாமல், நீங்கள் பேசுவதால் என்ன பயன்?
ஜி.எஸ்.டி., தொடர்பான ஆலோசனை கூட்டங்கள் நடக்கும் போது, அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள், தங்கள் மாநிலத்தின் கோரிக்கைகளை முன் வைக்க வேண்டும். இதை ஆய்வு செய்து நியாயம் கிடைக்க செய்வர். தேவையின்றி இங்கு பேசினால், எந்த பயனும் ஏற்படாது.
கிராம வளர்ச்சி துறை அமைச்சர் பிரியங்க் கார்கே: ஜி.எஸ்.டி., கூட்டத்துக்கு முதல்வர் சென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மாநிலம் சார்பில், யாரை வேண்டுமானாலும் அனுப்பலாம். வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா, மாநில பிரதிநிதியாக பங்கேற்றார். கர்நாடகாவுக்கு எந்த வகையில் பாதிப்பு ஏற்படுகிறது என்பதையும் விவரித்துள்ளார்.
ஆனால், மத்திய அரசிடம் இருந்து நியாயம் கிடைக்கவில்லை. இதற்கு முன் எடியூரப்பா முதல்வராக இருந்த போது, பசவராஜ் பொம்மையை, ஜி.எஸ்.டி., கூட்டத்துக்கு அனுப்பியிருந்தார். அதில் எந்த தவறும் இல்லை.
இவ்வாறு விவாதம் நடந்தது.

