தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மூன்று திருமணம் செய்து மோசடி: பெண் மீது இரு கணவர்கள் புகார்

 மூன்று திருமணம் செய்து மோசடி: பெண் மீது இரு கணவர்கள் புகார்

 மூன்று திருமணம் செய்து மோசடி: பெண் மீது இரு கணவர்கள் புகார்


ADDED : ஜன 31, 2026 05:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 05:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தொட்டபல்லாபூர்: மூன்று ஆண்களை திருமணம் செய்ததுடன், 20 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகாவின் அனபே கிராமத்தில் வசிப்பவர் சுதாராணி, 30. சில ஆண்டுகளுக்கு முன், தொட்டபல்லாபூரை சேர்ந்த வீரேகவுடா என்பவரை, திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

நாளடைவில் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட சுதாராணி, கணவரிடம் உனக்கு, 'புல்லட்' ஓட்ட வரவில்லை; கார் ஓட்ட வரவில்லை என, திட்டி அவமதித்தார். கணவரையும், குழந்தைகளையும் உதறிவிட்டு, வீட்டை விட்டு ஓடினார்.

அதன்பின், டெலிவரி பாய் வேலை செய்து வந்த அனந்தமூர்த்தி என்பவருடன் பழக்கம் ஏற்படுத்தி கொண்டார். தன் கணவர் இறந்து விட்டார் என, பொய் சொல்லி நாடகமாடினார்; அனந்த மூர்த்தியை காதலிப்பதாகவும் கூறினார். இதை நம்பிய அவரும், சுதாராணியை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

சில மாதங்கள் மட்டுமே அவருடன் வாழ்ந்த சுதாராணி, தன் மாமாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக்கூறி, அவரிடமிருந்து, 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் வாங்கினார்.

ஊருக்கு சென்று வருவதாக கூறி சென்றவர், மீண்டும் வரவே இல்லை. அனந்தமூர்த்தி சந்தேகமடைந்து விசாரித்த போது தான், அவரது முதல் கணவர் உயிருடன் இருப்பதும், அதுமட்டுமின்றி, கனகபுராவை சேர்ந்த நபரை மூன்றாவதாக திருமணம் செய்திருப்பதும் தெரியவந்தது.

இதன்பின், முதல் கணவர் வீரேகவுடாவும், இரண்டாவது கணவர் அனந்தமூர்த்தியும், தொட்டபல்லாபூர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர்.

அனந்தமூர்த்தி, தனக்கு சுதாராணி தேவையில்லை. அவரோடு வாழவும் தனக்கு விருப்பம் இல்லை. அவரிடம் இருந்து பணத்தை மட்டும் திரும்ப பெற்று தரும்படி போலீசாரிடம், வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us