/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
உடையார் எக்ஸ்பிரஸ் ராம்நகரில் நிறுத்தம்
/
உடையார் எக்ஸ்பிரஸ் ராம்நகரில் நிறுத்தம்
ADDED : மே 06, 2026 04:05 AM

ராம்நகர்: பெங்களூரு சிட்டி ரயில் நிலையம் - மைசூரு இடையில் தினமும் செல்லும் உடையார் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு கெங்கேரி, மாண்டியா ரயில் நிலையங்களில் மட்டுமே நிறுத்தம் கொடுக்கப்பட்டு இருந்தது.
ராம்நகரிலும் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா, ராம்நகரிலும் உடையார் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு நிறுத்தம் கொடுத்து உத்தரவு பிறப்பித்தார். நேற்று முதல் ராம்நகர் உடையார் எக்ஸ்பிரஸ் ரயில், ராம்நகரில் நின்று செல்கிறது.
ராம்நகர் ரயில் நிலையத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பெங்களூரில் இருந்து மைசூரு நோக்கி சென்ற உடையார் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு, சோமண்ணா உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு அளித்தனர்.

