ADDED : செப் 13, 2026 11:18 PM

ஹாவேரி: ஹாவேரி மாவட்டம், ஷிகாவி தாலுகாவின், ஷிட்லாபுரா கிராமத்தில் வசிப்பவர் நீலவ்வா, 30. இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் நாகராஜ் சுங்கதா என்பவரின் வீட்டில், சில நாட்களுக்கு முன், வரமஹாலட்சுமி பூஜை நடந்தது.
மஞ்சள், குங்குமம் பெற வரும்படி, அக்கம், பக்கத்து வீட்டினருக்கு நாகராஜ் அழைப்பு விடுத்தார். எனவே நீலவ்வா உட்பட, 11 பெண்கள் பூஜைக்கு சென்றிருந்தார்.
பூஜை முடிந்த பின், கடவுள் மீது அணிவித்திருந்த தங்க நகை திருடு போனது. இது குறித்து, பங்காபுரா போலீஸ் நிலையத்தில், நாகராஜ் புகார் அளித்தார். பூஜைக்கு வந்தவர்களின் பெயர்கள், வீட்டு விலாசத்தை கொடுத்தார்.
நீலவ்வாவும் சென்றிருந்ததால் , அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். நகை யை திருடியதாக ஒப்புக்கொள்ளும்படி தாக்கினர். 'கரென்ட் ஷாக்' கொடுத்தனர். இதில் பாதிப்படைந்த அவர், மருத்துவனையில் சிகிச்சை பெறுகிறார்.
