கே.பி.எஸ்.சி., அமைப்பு கலைப்பு? அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே பதில்
கே.பி.எஸ்.சி., அமைப்பு கலைப்பு? அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே பதில்
ADDED : செப் 13, 2026 11:19 PM

பெங்களூரு: கே.பி.எஸ்.சி., அமைப்பு கலைக்கப்படும் என அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே கூறினார்.
கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையம், அரசு பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய தேர்வுகளை நடத்துகிறது. சில ஆண்டுகளாக கே.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகளில் ஏதாவது ஒரு முறைகேடு நடந்து வருகிறது.
சமீபத்தில் கூட கால்நடை மருத்துவ அதிகாரி தேர்வில் முறைகேடு நடந்தது தெரிந்தது. கே.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டாளராக இருந்த ஐ.ஏ.எஸ்., ஞானேந்திரகுமார், பா.ஜ., பிரமுகர் பசவராஜ் கன்னாலே கைது செய்யப்பட்டனர்.
இந் நிலையில், கர்நாடக கிராம பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே நேற்று அளித்த பேட்டி:
கே.பி.எஸ்.சி., நடத்தும் தே ர்வுகளில் முறைகேடு நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டியது அதன் தலைவரும், உ றுப்பினர்களும் தான். ஆனால் இங்கு தலைவர், உறுப்பினர்கள் மீ தே முறைகேடு, ஊழல் குற்றச்சாட் டு உள்ளது.
எனவே, கே.பி.எஸ்.சி., அமைப்பை கலைத்து விட்டு, யு.பி.எஸ்.சி., முறையில் தேர்வு நடத்தலாமா என்று அரசு ஆலோசிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
