/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அரசு பஸ்சில் மாட்டிறைச்சி பெண் கைது; ஆணுக்கு வலை
/
அரசு பஸ்சில் மாட்டிறைச்சி பெண் கைது; ஆணுக்கு வலை
ADDED : ஏப் 07, 2025 04:54 AM
பாகல்கோட் : கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சில் சட்ட விரோதமாக மாட்டிறைச்சி கொண்டு சென்ற பெண் கைது செய்யப்பட்டார். அவருடன் இருந்த மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஹூப்பள்ளி மாவட்டத்தில் இருந்து பாகல்கோட்டையில் உள்ள தளிகோட்டேவுக்கு நேற்று முன்தினம் அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ், பாகல்கோட்டின் நவநகர் பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
அப்போது அந்த பஸ்சில் ஏறிய ஆணும், பெண்ணும், தங்கள் கையில் இருந்த இரண்டு பெரிய பையை சீட்டுக்கு அடியில் வைத்தனர். டிக்கெட் தந்து கொண்டிருந்த நடத்துனர், இருக்கையின் கீழ் உள்ள பையை கவனித்தார். அதை திறந்து பார்த்தபோது, இறைச்சி இருப்பதை கண்டார்.
உடனடியாக இருவரையும் பஸ்சில் இருந்து கீழே இறக்கினார். இத்தகவல் ஹிந்து அமைப்பினருக்கு தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் வருவதற்கு முன், கூட்டம் கூடுவதை பார்த்த மூட்டைகள் கொண்டு வந்த நபர், அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அவருடன் இருந்த பெண்ணை, அங்கிருந்தவர்கள் பிடித்து வைத்து கொண்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த நவநகர் போலீசார், பையில் இருந்தது மாட்டிறைச்சி என்பதை உறுதி செய்தனர். அப்பெண்ணிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அதேவேளையில், தப்பியோடிய நபரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

