sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 ராமதாஸ் பெயரில் புதுக்கட்சி உதயம்

/

 ராமதாஸ் பெயரில் புதுக்கட்சி உதயம்

 ராமதாஸ் பெயரில் புதுக்கட்சி உதயம்

 ராமதாஸ் பெயரில் புதுக்கட்சி உதயம்

11


UPDATED : பிப் 11, 2026 05:48 AM

ADDED : பிப் 11, 2026 02:35 AM

Google News

11

UPDATED : பிப் 11, 2026 05:48 AM ADDED : பிப் 11, 2026 02:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் ஆதரவாளர், 'அய்யா பாட்டாளி மக்கள் கட்சி' என்ற பெயரில், புதுக்கட்சி துவக்கி இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.

ராமதாஸ் - அன்புமணி இடையே ஏற்பட்ட மோதலில், பா.ம.க., உடைந்தது. ஆனால், கட்சியும், மாம்பழ சின்னமும் அன்புமணிக்கு தான் சொந்தம் என, தேர்தல் கமிஷன், நீதிமன்றம் அறிவித்துள்ளன. இதனால் கோபமடைந்த ராமதாஸ், வரும் தேர்தலில், அன்புமணிக்கு எதிராக தன் ஆதரவாளர்களை களமிறக்க ஆலோசித்து வருகிறார்.

இந்நிலையில், அவரது அணியின் தலைமை நிலையச் செயலர் அன்பழகனின் மகன் முகிலன், தன் தலைமையில், 'அய்யா பாட்டாளி மக்கள் கட்சி' என்ற பெயரில், புதிய கட்சியை உருவாக்கி உள்ளார்.

பா.ம.க., கொடியில் ராமதாஸ் படத்தை வைத்து, கொடி தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்சியை பதிவு செய்ய, தேர்தல் கமிஷனிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ராமதாஸ் ஆதரவு உள்ளதா என்பது தெரியவில்லை.






      Dinamalar
      Follow us