sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'வெள்ளி, திங்கள் தேர்தல் வேண்டாம்': தே.ஜ., கூட்டணி கட்சிகள் விருப்பம்

/

'வெள்ளி, திங்கள் தேர்தல் வேண்டாம்': தே.ஜ., கூட்டணி கட்சிகள் விருப்பம்

'வெள்ளி, திங்கள் தேர்தல் வேண்டாம்': தே.ஜ., கூட்டணி கட்சிகள் விருப்பம்

'வெள்ளி, திங்கள் தேர்தல் வேண்டாம்': தே.ஜ., கூட்டணி கட்சிகள் விருப்பம்

5


UPDATED : பிப் 11, 2026 05:48 AM

ADDED : பிப் 11, 2026 02:52 AM

Google News

5

UPDATED : பிப் 11, 2026 05:48 AM ADDED : பிப் 11, 2026 02:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'தமிழக சட்டசபை தேர்தலை, திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை நடத்த வேண்டாம்' என, அ.தி.மு.க., -- பா.ஜ., - -பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்த உள்ளன.

தமிழக சட்டசபை தேர்தல், வரும் ஏப்ரலில் நடக்க உள்ளது. இம்மாத இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும்.

சட்டசபை தேர்தல் குறித்து, அரசு அதிகாரிகள், கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்த, தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார், கமிஷனர்கள் சுக்பிர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர், நாளை சென்னை வருகின்றனர்.

இந்நிலையில், 'தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவை, திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமையில் வைக்க வேண்டாம்' என, அ.தி.மு.க., -- பா.ஜ., -- பா.ம.க., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் வலியுறுத்த திட்டமிட்டுள்ளன.

அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:


திங்கள் அல்லது வெள்ளிக்கிழமை தேர்தல் நடந்தால், தொடர்ந்து மூன்று நாள் விடுறை கிடைக்கும். இதனால், சென்னை, கோவை, திருப்பூர் போன்ற நகரங்களில் வசிப்போர், ஓட்டளிக்காமல் சொந்த ஊர் சென்று விடுகின்றனர்.

கடந்த 2024 லோக்சபா தேர்தல், வெள்ளிக்கிழமை நடந்தது; சென்னை, கோவையில் குறைவாக ஓட்டுப்பதிவு இருந்தது. எனவே, வரும் சட்டசபை தேர்தலை திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமையில் நடத்த வேண்டாம் என, சென்னை வரும் தலைமைத் தேர்தல் கமிஷனரிடம் வலியுறுத்துவோம். இவ்வாறு கூறினர்.

பா.ஜ., நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, 'திங்கள், வெள்ளி மட்டுமின்றி, ஞாயிற்றுக்கிழமையும் தேர்தல் வைக்கக்கூடாது என்பதை, தேர்தல் கமிஷனர்களிடம் வலியுறுத்துவோம்' என தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us