/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சரக்கு வாகனத்தில் சிக்கி பெண் பலி
/
சரக்கு வாகனத்தில் சிக்கி பெண் பலி
ADDED : செப் 14, 2025 04:20 AM
காட்டன்பேட்: சரக்கு வாகனத்தின் டயரில் சிக்கி பெண் உயிரிழந்தார். டிரைவர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு, காட்டன்பேட்டில் வசித்தவர் அஞ்சாதேவி, 45. இவர், நேற்று முன்தினம் தன் உறவினருடன் கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றார். குறுகலான சாலையில் நடந்து சென்றபோது, ஒரு வீட்டிற்குள் இருந்து ஸ்கூட்டர் தானாக வெளியே வந்தது.
ஸ்கூட்டர், தங்கள் மீது மோதாமல் இருக்க, அஞ்சாதேவியும், அவரது உறவினரும் நகர்ந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு வாகனம் அஞ்சாதேவி மீது மோதியது. கீழே விழுந்த அவர் மீது சரக்கு வாகனத்தின் டயர் ஏறி, இறங்கியது. சம்பவ இடத்திலேயே அஞ்சாதேவி இறந்தார். டிரைவர் கிரணை, காட்டன்பேட் போலீசார் கைது செய்தனர்.
அஞ்சாதேவி மீது சரக்கு வாகனம் மோதும் காட்சி, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன. விபத்து வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.