தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நீச்சல் குளத்தில் பெண் மரணம்; கணவர் மீது குற்றச்சாட்டு

 நீச்சல் குளத்தில் பெண் மரணம்; கணவர் மீது குற்றச்சாட்டு

 நீச்சல் குளத்தில் பெண் மரணம்; கணவர் மீது குற்றச்சாட்டு


ADDED : ஜன 26, 2026 04:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 26, 2026 04:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராம்நகர்: நீச்சல் குளத்தில் இளம்பெண் உடல் மீட்கப்பட்டது. கொலை செய்து உடலை வீசியதாக, கணவர் மீது மனைவி குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

பெங்களூரு தெற்கு மாவட்டம், கனகபுரா அருகே பெட்டேகவுடனபாளையா கிராமத்தில் வசிப்பவர் பாபு, 35; விவசாயி. குடும்ப தகராறில் இவரது முதல் மனைவி பிரிந்து சென்றார். இதனால் பிரதிபா, 29, என்பவரை, ஆறு ஆண்டுகளுக்கு முன் இரண்டாவது திருமணம் செய்தார். இரண்டு மகன்கள் உள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களாக தம்பதி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. நேற்று காலை, பாபுவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில், பிரதிபா பிணமாக மிதந்தார். நீச்சல் குளத்தில் குளித்த போது மூச்சுத்திணறி இறந்து இருக்கலாம் என்று போலீசார் நினைத்தனர்.

ஆனால், பிரதிபாவின் குடும்பத்தினர் கொலை என்று குற்றம்சாட்டினர். பாபுவுக்கும், அவரது முதல் மனைவிக்கும் இடையில் மீண்டும் சமரசம் ஏற்பட்டு விட்டது. முதல் மனைவி பேச்சை கேட்டு பிரதிபாவை கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை நீச்சல் குளத்தில் வீசியதாக, பிரதிபா குடும்பத்தினர் கூறினர். கொடிகேஹள்ளி போலீசிலும் பாபு மீது புகார் அளித்தனர். பாபுவிடம் விசாரணை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us