ADDED : மார் 04, 2026 05:01 AM
பெங்களூரு: வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத்திணறி பெண் இறந்தார்.
பெங்களூரு காயத்ரி நகரில் வசிப்பவர் ரமேஷ் பாபு, 55. இவரது மனைவி சவிதா, 53. இவர்களுக்கு நான்கு மாடி கட்டடம் கொண்ட வீடு உள்ளது. மூன்றாவது மாடியில் வசிக்கின்றனர். மற்ற மூன்று மாடிகளில் உள்ள வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளனர் .
நேற்று முன்தினம் இரவு, ரமேஷ் பாபு வீட்டின் சமையல் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, வீடு முழுதும் தீ பரவியது. தீயணைப்பு படையினர் வந்து தண் ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனாலும், புகை மூட்டத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சவிதா உயிரிழந்தார்.
ரமேஷ் பாபு, அவரது தாய் சன்னம்மா மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. மின்கசிவா அல்லது காஸ் சிலிண்டர் கசிவா என்ற கோணத்தில், சுப்பிரமணியநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
