/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'உறவு' வைத்துவிட்டு திருமணத்திற்கு மறுப்பு: பா.ஜ., - எம்.எல்.ஏ., மகன் மீது பெண் புகார்
/
'உறவு' வைத்துவிட்டு திருமணத்திற்கு மறுப்பு: பா.ஜ., - எம்.எல்.ஏ., மகன் மீது பெண் புகார்
'உறவு' வைத்துவிட்டு திருமணத்திற்கு மறுப்பு: பா.ஜ., - எம்.எல்.ஏ., மகன் மீது பெண் புகார்
'உறவு' வைத்துவிட்டு திருமணத்திற்கு மறுப்பு: பா.ஜ., - எம்.எல்.ஏ., மகன் மீது பெண் புகார்
ADDED : ஜூலை 18, 2025 11:30 PM

பீதர்: உறவு வைத்துவிட்டு திருமணத்திற்கு மறுப்பதாக, அவுராத் பா.ஜ., - எம்.எல்.ஏ., பிரபு சவுஹான் மகன் பிரதீக் சவுஹான் மீது, கர்நாடக மாநில மகளிர் ஆணையத்தில் ஒரு இளம்பெண் புகார் செய்துள்ளார்.
கர்நாடகாவின் பீதர் அவுராத் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., பிரபு சவுஹான். இவரது மகன் பிரதீக் சவுஹான், 27. இவருக்கும், மஹாராஷ்டிராவின் நந்தேட் தாலுகா தெக்லுார் கிராமத்தின் 25 வயது இளம்பெண்ணுக்கும், 2023, டிசம்பர் 25ம் தேதி தெக்லுார் அருகே காம்சுபாய் தாண்டாவில் திருமண நிச்சயம் நடந்தது.
பல காரணங்களால் இருவரின் திருமணமும் தள்ளிபோனது.
கடந்த மாதம் சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் பத்து பேர் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதும், ஒருவர் கன்னத்தில் எம்.எல்.ஏ., பிரபு சவுஹான் அறையும் காட்சிகளும் இருந்தன. ஏதோ குடும்ப தகராறு என்று கூறப்பட்டது. இந்த வீடியோ பெரிய அளவில் பேசு பொருளாக மாறவில்லை.
நிச்சயம்
இந்நிலையில், பிரதீக்குடன் திருமணம் நிச்சயம் செய்து கொண்டதாக கூறப்படும் இளம்பெண், கர்நாடக மாநில மகளிர் ஆணையத்தில் நேற்று முன்தினம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:
எனக்கும், அவுராத் பா.ஜ., - எம்.எல்.ஏ., பிரபு சவுஹான் மகன் பிரதீக் சவுஹானுக்கும், 2023, டிசம்பர் 23ம் தேதி இருவீட்டார் முன்னிலையில் திருமண நிச்சயம் நடந்தது. நிச்சயத்திற்கு பின், மஹாராஷ்டிராவின் லத்துாருக்கு என்னை, பிரதீக் அடிக்கடி அழைத்துச் சென்றார்.
அங்கு ஒரு லாட்ஜில் வைத்து, என்னுடன் நான்கு முறை உறவு கொண்டார். நமக்கு திருமண நிச்சயம் ஆகிவிட்டது. இதில் எந்த தவறும் இல்லை என்று கூறி, என்னை சமாதானப்படுத்தினார்.
அதற்கு பின் என்னுடன் பேசுவதை தவிர்த்தார். திருமணத்தையும் பல காரணம் கூறி தள்ளிபோட்டார். ஒரு கட்டத்தில் 'நீ ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். உன்னை திருமணம் செய்ய முடியாது' என்று கூறினார். என் பெற்றோர் சென்று நியாயம் கேட்டபோது, பிரதீக் அவமதித்தார்.
பிரதீக் மீது இம்மாதம் 6ம் தேதி அவுராத்தின் ஹோக்ரான் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். எம்.எல்.ஏ., மகன் என்பதால், போலீசார் புகாரை ஏற்கவில்லை. என்னை ஏமாற்றிய பிரதீக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறி இருந்தார்.
புகார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக, மாநில மகளிர் ஆணையம் உறுதி அளித்துள்ளது.
எம்.எல்.ஏ., மறுப்பு
இதுகுறித்து எம்.எல்.ஏ., பிரபு சவுஹான் கூறியது:
என் மகன் மீது புகார் கொடுத்த பெண்ணுக்கும், என் மகனுக்கும் திருமண நிச்சயம் நடந்தது உண்மை தான். ஆனால் என் மகன் அந்த பெண்ணை, பாலியல் ரீதியாக பயன்படுத்தவில்லை. அரசியல்ரீதியாக என்னை முடிக்க சதி நடக்கிறது.
அந்த பெண்ணின் பின்னணியில் யார் உள்ளனர் என்பதை நேரம் வரும்போது கூறுவேன். மகளிர் ஆணையம் நோட்டீஸ் கொடுக்கட்டும். எதிர்கொள்ள தயாராக உள்ளேன். நான் ஒரு சமூகத்தின் தலைவராக வளர்ந்து வருவது சிலருக்கு பிடிக்கவில்லை.
இவ்வாறு கூறினார்.