பேசி கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதியதில் பெண் பலி
பேசி கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதியதில் பெண் பலி
ADDED : செப் 30, 2026 03:48 AM
பல்லாரி: சாலையோரத்தில் நடைபாதையில் நின்று பேசிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதியதில், பெண் உயிரிழந்தார். மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
பல்லாரி மாவட்டம் குருகோடு தாலுகாவின் சோமசமுத்ரா கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை 150 'ஏ' ஓரத்தில் நடைபாதையில் அதே கிராமத்தை சேர்ந்த மஹாதேவி, 48, சுனிதா, பூஜாரி ஜதேம்மா, ககன் ஆகியோர் பேக்கரி ஒன்றின் அருகில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது வேகமாக வந்த லாரி, நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது.
இதில், மஹாதேவி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சுனிதா, பூஜாரி ஜதேம்மா, ககன் ஆகியோர், மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர்.
ஓட்டுநரின் அதிவேகம், கவனக்குறைவே இந்த விபத்துக்கு காரணம் என்று விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த கொரகோடு போலீசார், வழக்குப்பதிவு செய்த விசாரிக்கின்றனர்.
