தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெண்ணை கொன்று தங்க செயின் பறிப்பு 

 பெண்ணை கொன்று தங்க செயின் பறிப்பு 

 பெண்ணை கொன்று தங்க செயின் பறிப்பு 


ADDED : பிப் 10, 2026 04:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2026 04:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெலமங்களா: பெண்ணை கொன்று தங்க செயினை பறித்துச் சென்ற, இருவரை போலீசார் தேடுகின்றனர்.

பெங்களூரு ரூரல் நெலமங்களா அருகே ஹுஸ்கூர் கிராமத்தில் வசித்தவர் ஜோதி, 45. இவர் நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த இருவர், ஜோதியின் மீது ரசாயனம் கலந்த ஸ்பிரே தெளித்தனர்.

மயங்கி விழுந்த ஜோதியின் கழுத்தில் கிடந்த, 70 கிராம் தங்க செயினை பறித்து தப்பினர். நீண்ட நேரமாக ஜோதி வீட்டிற்குள் வராததால், குடும்பத்தினர் வெளியே சென்று பார்த்த போது மூச்சு பேச்சு இல்லாமல் மயங்கி கிடந்தார்.

அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். ரசாயனம் கலந்த ஸ்பிரேயை சுவாசித்ததால், மயங்கி விழுந்து தலையில் அடிபட்டு இறந்தாரா அல்லது மர்ம நபர்கள் செயினை பறித்ததில் கழுத்தில் காயம் அடைந்து இறந்தாரா என்று தெரியவில்லை.

பிரேத பரிசோதனை வந்த பின்னரே, இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று, நெலமங்களா போலீசார் கூறியுள்ளனர். தங்க செயினை பறித்து சென்ற இருவரையும் தேடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us