/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நாயை 'வாக்கிங்' அழைத்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை
/
நாயை 'வாக்கிங்' அழைத்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை
நாயை 'வாக்கிங்' அழைத்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை
நாயை 'வாக்கிங்' அழைத்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை
ADDED : நவ 16, 2025 10:55 PM
ஞானபாரதி: நாயை வாக்கிங் அழைத்து சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன் 25,000 ரூபாய் மதிப்பிலான மொபைல் போனை பறித்து சென்ற, வாலிபரை போலீசார் தேடுகின்றனர்.
பெங்களூரு ஞானபாரதி உபகர் லே - அவுட்டில் வசிப்பவர் 25 வயது இளம்பெண். இவர் நேற்று முன்தினம் இரவு, தனது வீட்டில் வளர்க்கும் நாயை வாக்கிங் அழைத்து சென்றார். ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் சென்ற போது, ஒரு வாலிபர் அங்கு வந்தார்.
'உங்கள் நாய் அழகாக உள்ளது. தொட்டு பார்க்கலாமா' என்று கேட்டார். இளம்பெண் அனுமதி கொடுத்தார். நாயை தொட்டு பார்த்த வாலிபர் திடீரென, இளம்பெண்ணையும் தொட்டு, பாலியல் தொல்லை கொடுத்தார். அதிர்ச்சி அடைந்த இளம்பெண், வாலிபரை பிடித்து தள்ளி விட்டார்.
இந்த நேரத்தில் இளம்பெண் கையில் வைத்திருந்த 25,000 ரூபாய் மதிப்பிலான மொபைல் போன் கீழே விழுந்தது. அதை எடுத்து கொண்டு வாலிபர் தப்பினார். இளம்பெண் அளித்த புகாரில், வாலிபர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவானது.
சம்பவம் நடந்த இடத்தில் உள்ள, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

