/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
செயின் பறிக்க வந்தவர்களை 'ஸ்ப்ரே' அடித்து விரட்டிய பெண்
/
செயின் பறிக்க வந்தவர்களை 'ஸ்ப்ரே' அடித்து விரட்டிய பெண்
செயின் பறிக்க வந்தவர்களை 'ஸ்ப்ரே' அடித்து விரட்டிய பெண்
செயின் பறிக்க வந்தவர்களை 'ஸ்ப்ரே' அடித்து விரட்டிய பெண்
ADDED : ஜூலை 19, 2025 11:09 PM
பாகல்கோட்: வீட்டுக்குள் நுழைந்து செயின் பறிக்க முயன்ற மர்ம நபர்களை, பெண் ஒருவர் காக்ரோச் ஸ்ப்ரே அடித்து ஓட ஓட விரட்டினார்.
பாகல்கோட் மாவட்டம், ஜமகன்டி நகரின், கவுதம புத்தா காலனியில் வசிப்பவர் பிருத்வி பிரதீப், 35. நேற்று முன்தினம் மதியம் 12:00 மணியளவில், இவர் தனியாக வீட்டில் இருந்தார். இதை நோட்டம் விட்ட இரண்டு மர்ம நபர்கள், செயின் பறிக்க திட்டம் தீட்டினர்.
கதவை வேகமாக தட்டினர். கதவை திறந்த பிருத்வி பிரதீப்பிடம் ஹிந்தியில் பேசி, கவனத்தை திசை திருப்பினர். அவர்களில் ஒருவர் பிருத்வியின் கழுத்தில் இருந்த தங்கச்செயினை பறிக்க முயற்சித்தார். அப்போது துணிச்சலுடன் அவர், தன் அருகில் இருந்த காக்ரோச் ஸ்ப்ரேவை எடுத்து அந்நபர்களின் முகத்தில் அடித்தார்.
பெண்ணின் திடீர் தாக்குதலால், வெலவெல்லத்துப்போன அந்நபர்கள், கண் எரிச்சல் தாங்காமல், அலறி கொண்டு அங்கிருந்து தப்பியோடினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்து அங்கு வந்த ஜமகன்டி போலீசார், பிருத்வி பிரதீப்பின் துணிச்சலை பாராட்டினர்; 'பெண்கள் இதே போன்று இருக்க வேண்டும்' என்றனர்.