/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விமானத்தை வீழ்த்துவேன் என மிரட்டிய பெண், ஆவணங்களின்றி அத்துமீறிய ஆண் கைது
/
விமானத்தை வீழ்த்துவேன் என மிரட்டிய பெண், ஆவணங்களின்றி அத்துமீறிய ஆண் கைது
விமானத்தை வீழ்த்துவேன் என மிரட்டிய பெண், ஆவணங்களின்றி அத்துமீறிய ஆண் கைது
விமானத்தை வீழ்த்துவேன் என மிரட்டிய பெண், ஆவணங்களின்றி அத்துமீறிய ஆண் கைது
ADDED : ஜூன் 20, 2025 11:15 PM

பெங்களூரு: விமானத்துக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில், 'விமானத்தை வீழ்த்திவிடுவேன்' என்று மிரட்டிய பெண்ணையும், உரிய ஆவணங்களின்றி, விமான நிலையத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற ஸ்ரீநகர் வாலிபரையும் போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு எலஹங்காவின் சிவனஹள்ளியை சேர்ந்தவர் டாக்டர் மோகன் பை. இவர், தன் மனைவி வியாஸ் ஹிராலுடன், 36, இம்மாதம் 17ம் தேதி பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார்.
தாங்கள் செல்லும், 'ஏர் இந்தியா ஐஎக்ஸ் 2749' விமானத்தில் ஏறி அமர்ந்தனர். அப்போது, வியாஸ் ஹிரால், தன் உடைமையை, அவரின் இருக்கை மேல்பகுதியில் வைக்காமல், முன் இருக்கையில் வைத்தார்.
அந்த பையை மேலே வைக்கும்படி, விமான பணிப்பெண்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால், வியாஸ் செய்யவில்லை. விமானி சொன்ன பின்னும், அப்பெண் கேட்கவில்லை. விமானத்தில் இருந்த சக பயணியர் கூறியதையும் கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் சக பயணியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி, 'விமானத்தை வீழ்த்திவிடுவேன்' என்று மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து விமானி, உடனடியாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார். விமானத்துக்குள் வந்த பாதுகாப்பு படையினர், அப்பெண்ணை அழைத்துச் சென்று, விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.
அவர் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீநகர் வாலிபர்
இதுபோன்று, இம்மாதம் 17ம் தேதி, ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரை சேர்ந்தவர் சதாத் முகமது பாபா, 22, நேற்று பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தின் முதல் முனையத்தின் எட்டாவது நுழைவாயில் வழியாக, எந்த ஆவணங்களையும் காட்டாமல், அத்துமீறி நுழைய முயன்றார்.
அவரை தடுக்க முயற்சித்த சி.ஐ.எஸ்.எப்., அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனடியாக அவர், விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

