/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு கொள்ளை
/
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு கொள்ளை
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு கொள்ளை
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு கொள்ளை
ADDED : நவ 07, 2025 11:01 PM
ஆனேகல்: ஆனேகல்லில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப் போட்டு, 200 கிராம் தங்க நகைகளை ஒரு கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.
பெங்களூரு, ஆனேகல்லின் அத்திபள்ளியின் நெரலுாரை சேர்ந்தவர்கள் ரவிகுமார் - நாகவேணி தம்பதி. ரவிகுமார், தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு, வங்கியில் டிபாசிட் செய்த நகைகளை வீட்டுக்கு கொண்டு வந்திருந்தார்.
கடந்த 5ம் தேதி மதியம் ரவிகுமார் பணிக்கு சென்றுவிட்டார். 2:30 மணியளவில் அவரின் வீட்டுக்கு வந்த ஒரு பெண் உட்பட மூன்று பேர், திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்ததாக கூறியுள்ளனர். அவரும் வீட்டிற்குள் அனுமதித்து, நாகவேணி அமர வைத்துள்ளார்.
அவர்களுடன் வந்திருந்த பெண், குடிக்கு தண்ணீர் கேட்டுள்ளார். நாகவேணியும், தண்ணீர் எடுக்க சமையல் அறைக்கு சென்றார். அவரை பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர், நாகவேணியில் கழுத்தில் கத்தியை வைத்து, சத்தம் போட்டால் கொன்றுவிடுவதாக மிரட்டி உள்ளார்.
மற்றொருவர், நாகவேணியின் வாயில் துணியை வைத்து, நாற்காலியில் கட்டிப்போட்டனர். பின், வீட்டில் இருந்து 200 கிராம் தங்க நகைகள், நாகவேணியில் கழுத்தில் இருந்த 50 கிராம் தங்க நகைகளை கொள்ளையடித்தனர்.
நாற்காலியில் கட்டிப்போட்டிருந்த நாகவேணியில், மேஜையில் இருந்த மொபைல் போனை, காலால் பிடித்து, அண்டை வீட்டினருக்கு தகவல் தெரிவித்தார்.
அவர்கள் வந்து நாகவேணியை மீட்டனர்.
பின், அத்திபள்ளி போலீசாருக்கும், நாகவேணியின் கணவருக்கும் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, மூவரின் அடையாளம் தெரிய வந்தது. அவர்களை பிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

