/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குழந்தையின் பாலினம் தெரிந்து கருவை கலைத்த பெண் 'அட்மிட்'
/
குழந்தையின் பாலினம் தெரிந்து கருவை கலைத்த பெண் 'அட்மிட்'
குழந்தையின் பாலினம் தெரிந்து கருவை கலைத்த பெண் 'அட்மிட்'
குழந்தையின் பாலினம் தெரிந்து கருவை கலைத்த பெண் 'அட்மிட்'
ADDED : ஆக 27, 2025 10:43 PM
ராம்நகர்: வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினம் தெரிந்ததால், கருவை கலைத்த பெண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
ராம்நகரின் தட்டகுனியை சேர்ந்தவர், 35 வயது பெண். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், மூன்றாவதாக கர்ப்பம் அடைந்தார். மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்தால் வளர்ப்பது கஷ்டம் என்று பெண்ணும், அவரது கணவரும் நினைத்தனர்.
ராம்நகர் அரசு மருத்துவமனைக்கு சென்று, வயிற்றை ஸ்கேன் செய்து வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொண்டனர். பெண்ணின் வயிற்றில் வளர்வது பெண் கரு என்று தெரிந்தது. இதனால் அந்த பெண் யாரிடமும் சொல்லாமல், வயிற்றில் வளரும் கருவை கலைத்து உள்ளார். ரத்த போக்கு ஏற்பட்டு மயங்கி விழுந்த அவரை, உறவினர்கள் மீட்டு பெங்களூரு வாணி விலாஸ் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
டாக்டர்கள், பெண்ணிற்கு உடல் பரிசோதனை செய்த போது கருவை கலைத்தது தெரிந்தது. இதுகுறித்து ராம்நகர் மருத்துவ அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு சென்ற அதிகாரிகள், குழந்தையின் பாலினத்தை கண்டறிய உதவிய ஸ்கேன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர். கருவை கண்டறிந்து கூறிய ஊழியர்கள் யார் என்று விசாரணை நடக்கிறது.