/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விபத்து ஏற்படுத்தி விட்டு 'அட்ராசிட்டி' செய்த பெண்
/
விபத்து ஏற்படுத்தி விட்டு 'அட்ராசிட்டி' செய்த பெண்
விபத்து ஏற்படுத்தி விட்டு 'அட்ராசிட்டி' செய்த பெண்
விபத்து ஏற்படுத்தி விட்டு 'அட்ராசிட்டி' செய்த பெண்
ADDED : நவ 15, 2025 08:05 AM

கே.ஆர்.: சாலையில் தவறான வழியில் வந்து, ஆட்டோவில் மோதியது மட்டுமின்றி அடாவடி செய்த பெண்ணால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
பெங்களூரு கே.ஆர்., புரம் அருகில், மாலுார் - பைரனஹள்ளி சாலையில், நேற்று காலையில் போக்குவரத்து விதிகளை மீறி ஒரு பெண் ஸ்கூட்டியை ஓட்டி வந்தார். சரியான வழியில் எதிரே வந்த ஆட்டோ மீது ஸ்கூட்டி மோதியது.
இதனால், ஆத்திரம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர், அப்பெண்ணை திட்டினார். இதற்கு சற்றும் சலிக்காத அப்பெண்ணும் ஆட்டோ ஓட்டுநரை வசைபாடினார். மேலும், ஆட்டோவையும், ஓட்டுநரையும் தாக்க முயன்றார்.
இருவரும் நடுரோட்டில் நின்று கொண்டு தகராறு செய்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை வேளையில் பணிக்கு செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார், அப்பெண்ணை சமாதானப்படுத்த முயற்சித்தார். 'தவறு உங்கள் மீது தான். தவறான வழியில் வந்தது நீங்கள் தான்' என அப்பெண்ணிடம் போலீசார் கூறினார். இருப்பினும், அப்பெண், ஓட்டுநருடன் சண்டையிடுவதிலேயே மும்முரமாக இருந்தார்.
ஒரு வழியாக அங்கிருந்து பெண்ணையும், ஆட்டோ ஓட்டுநரையும் போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். இந்த சம்பவத்தை ஒருவர் மொபைல் போனில் வீடியோயோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றினார்.
அப்பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என, பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

