/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தமிழக வாலிபருடன் 'டேட்டிங்' செயலி நட்பு தங்க நகை திருடிய பெண், காதலன் கைது
/
தமிழக வாலிபருடன் 'டேட்டிங்' செயலி நட்பு தங்க நகை திருடிய பெண், காதலன் கைது
தமிழக வாலிபருடன் 'டேட்டிங்' செயலி நட்பு தங்க நகை திருடிய பெண், காதலன் கைது
தமிழக வாலிபருடன் 'டேட்டிங்' செயலி நட்பு தங்க நகை திருடிய பெண், காதலன் கைது
ADDED : நவ 16, 2025 11:46 PM
இந்திரா நகர்: 'டேட்டிங்' செயலி மூலம் தமிழக வாலிபரிடம் தங்க நகைகளை திருடிய பெண் மற்றும் அவரது காதலனை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தை சேர்ந்தவர் அவினாஷ், 26, பீன்யாவின் நாகசந்திராவில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இவர், இரண்டு மாதங்களுக்கு முன்பு 'டேட்டிங்' செயலியில், கவிப்பிரியா, 24, என்ற இளம் பெண்ணிடம் பேச துவங்கினார். இருவரும் தங்கள் மொபைல் எண்களை பரஸ்பரம் மாற்றி கொண்டனர். பின், இருவருக்குமான தொடர்பு அதிகமானது.
சில தி னங்களுக்கு முன் இருவரும் இந்திராநகரில் உள்ள 'பப்'பில் மது அருந்தினார். அப்போது, அவினாஷ் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால், நடக்க முடியா மல் தள்ளாடினார்.
இதனால், அவர் தங்கும் விடுதிக்கு போவது சரியாக இருக்காது என்றார். இதை பயன்படுத்தி கொண்ட கவிப்பிரியா, அதே பகுதியில் உள்ள ஹோட்டலில் இரவு தங்கி செல்வதற்கு அறை முன்பதிவு செய்தார். இருவரும் இரவு அங்கேயே தங்கினர்.
அவினாஷுக்கு குடிநீரில் மயக்க மருந்தை கலந்து கொடுத்தார். இதனால், அவர் மயக்கம் அடைந்தார். காலையில் எழுந்து பார்த்ததும் தான் அணிந்திருந்த 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் காணாமல் போயிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அறையில் அப்பெண்ணும் இல்லாததை பார்த்து நடந்ததை புரிந்து கொண்டார்.
இதுகுறித்து, இந்திராநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். விசாரணையில், கவிப்பிரியா, அவரது காதலன் ஹர்ஷவர்த்தன், 25, ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், கவிப்பிரியா - ஹர்ஷவர்த்தன் இருவரும் காதலித்து வந்தனர்.
இவர்கள் ஆடம்பரமாக செலவு செய்வதற்காக மொபைல் செயலிகளில் இருந்து கடன் வாங்கினர். கடனை அடைக்க முடியாததால், டேட்டிங் செயலி மூலம் மோசடி செய்ய திட்டமிட்டனர். இதுவே, இவர்களது முதல் குற்றம் என போலீசாரிடம் கூறி உள்ளனர்.

