/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பிரசவத்தில் டாக்டர் அலட்சியம் பெண் குடும்பத்தினர் குற்றச்சாட்டு டாக்டரின் அலட்சியத்தால் பெண் இறந்ததாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு

ADDED : ஏப் 22, 2025 05:12 AM
பெங்களூரு: பிரசவத்துக்கு வந்த இளம்பெண்ணொருவர், டாக்டரின் அலட்சியத்தால் இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெங்களூரு கே.ஆர்.மார்க்கெட் அருகில் உள்ள வாணி விலாஸ் மருத்துவமனைக்கு, சுவாதி, 25, என்பவர் இம்மாதம் 14ம் தேதி, பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு சுகப்பிரசவம் நடக்கும் என, டாக்டர்கள் கூறினர். பின், 'இரட்டை குழந்தைகள் இருப்பது போன்று தெரிவதால், ஆப்பரேஷன் செய்ய வேண்டும்' என்றனர்.
குடும்பத்தினரும் சம்மதித்தனர். அதன்பின் அவருக்கு ஆப்பரேஷன் செய்து, ஆண் குழந்தையை எடுத்தனர். ஆப்பரேஷனின்போது, அவரது பெருங்குடலை சேதப்படுத்தியதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் வலியால் அவதிப்பட்ட சுவாதி, உயிரிழந்தார்.
இதற்கு டாக்டர்களின் அலட்சியமே காரணம், குற்றஞ்சாட்டி குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர்.
அலட்சியம்
இதுகுறித்து சுவாதியின் குடும்பத்தினர் கூறியதாவது:
மருத்துவமனையில் சேர்த்தபோது, சுகப்பிரசவம் நடக்கும் என, நம்பிக்கை அளித்தனர். வயிற்றில் இரட்டை குழந்தை இருப்பது போன்று தென்படுவதால், ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என்றனர். மகள் மற்றும் குழந்தையின் நலனுக்காக நாங்களும் ஒப்புக்கொண்டோம்.
சிகிச்சையின்போது ஸ்வாதியின் பெருங்குடலை சேதப்படுத்தினர். அவருக்கு ஜூனியர் டாக்டர்களே சிகிச்சை செய்தனர். டாக்டரின் அலட்சியத்தால் இந்த இறப்பு நடந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வயிற்றில் மலம்
மகப்பேறு வல்லுநர் டாக்டர் அனிதா கூறியதாவது:
தாயின் வயிற்றிலேயே, குழந்தை மலம் கழித்துள்ளது. பிரசவ நாள் தாண்டினால், இது போன்று நடப்பது சகஜம்தான். உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்து, குழந்தையை வெளியே எடுத்தோம்.
வார்டுக்கு மாற்றிய பின், இரண்டு நாட்கள் அந்த பெண், நன்றாகத்தான் இருந்தார். மூன்றாவது நாளில் இருந்து, காய்ச்சல் போன்ற பிரச்னை தென்பட்டது. பெருங்குடலில் பிரச்னை இருப்பது, சி.டி., ஸ்கேனில் உறுதியானது. எனவே அறுவை சிகிச்சை செய்தோம். அவருக்கு நீரிழிவு உட்பட பல்வேறு பிரச்னைகள் இருந்தன. அவரை காப்பாற்ற டாக்டர்கள் முயற்சித்தும் பலன் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.