தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தி.மு.க.,வை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள் பா.ஜ., - எம்.பி., அனுராக்சிங் தாக்கூர் சாபம்

 தி.மு.க.,வை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள் பா.ஜ., - எம்.பி., அனுராக்சிங் தாக்கூர் சாபம்

 தி.மு.க.,வை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள் பா.ஜ., - எம்.பி., அனுராக்சிங் தாக்கூர் சாபம்


ADDED : ஏப் 20, 2026 02:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 20, 2026 02:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா தோல்வி அடைய காரணமாக இருந்த, தி.மு.க., சமாஜ்வாதி கட்சிகளை பெண்கள் மன்னிக்கவே மாட்டார்கள்,'' என்று, பா.ஜ., - எம்.பி., அனுராக்சிங் தாக்கூர் சாபமிட்டு உள்ளார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றவிடாமல், காங்கிரஸ், தி.மு.க., திரிணமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் தடுத்து உள்ளன. மசோதா தோல்வி அடைய காரணமாக இருந்த கட்சிகளை, பெண்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.

கடந்த 2024ல் லோக்சபா தேர்தல் நடந்த போது, பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்க்கட்சிகள் ஆதரித்தன. இப்போது அரசியல் லாபத்திற்காக எதிர்க்கின்றனர். மசோதா தோல்வி அடைந்ததன் மூலம், 'இண்டி' கூட்டணியின் பெண்கள் விரோத மனப்பான்மை வெளிப்பட்டு உள்ளது.

குடும்பம் சார்ந்த, குடும்பத்தால் நடத்தப்படும் கட்சிகள், டில்லி பெண்ணை வயநாடு தொகுதியில் போட்டியிட அனுமதிக்கின்றன. மற்ற பெண்களுக்கு ஏன் இப்படி வாய்ப்பு கிடைப்பது இல்லை. கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் லோக்சபா தொகுதிகளில் 10 இடங்கள் மட்டுமே அதிகரிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

ஆனாலும் தற்போது 20 இடங்கள் உயர வாய்ப்பு இருந்தது. கர்நாடகாவிலும் 28 தொகுதியில் இருந்து 42 தொகுதிகளாக உயர்ந்து இருக்கும். ஆனால், எல்லாவற்றையும் தடுத்து உள்ளனர்.

ஜாதி, மதம் அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்த முயன்ற காங்கிரஸ், இப்போது பிராந்திய அளவில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கிறது. பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்தும் முயற்சி தொடர்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மசோதா தவிர்க்க முடியாத ஒன்று. இடஒதுக்கீடு மூலம் தென் மாநிலங்களுக்கு எந்த அநீதியும் ஏற்படாது.

அவசரநிலையை அமல்படுத்தியும், அரசியலமைப்பை திருத்தியும் இருண்ட அத்தியாயத்திற்கு வழிவகுத்த காங்கிரஸ், இப்போது அரசியலமைப்பு பாதுகாப்பதாக கூறுவது கேலியாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டின் நன்மைக்காக, ஜி.எஸ்.டி.,யில் திருத்தம் கொண்டு வந்து உள்ளது. 370வது சட்ட பிரிவை ரத்து செய்யும் சீர்திருத்தம் கொண்டு வந்தோம். தேர்தல் செலவை குறைக்க ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அறிவித்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us