தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சர்ஜாபூரில் நாளை மகளிர் தினம் கொண்டாட்டம்

 சர்ஜாபூரில் நாளை மகளிர் தினம் கொண்டாட்டம்

 சர்ஜாபூரில் நாளை மகளிர் தினம் கொண்டாட்டம்


ADDED : மார் 27, 2026 05:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2026 05:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சர்ஜாபூர்: பெங்களூரு ரூரல் சர்ஜாபூர் டவுனில் உள்ள அம்பேத்கர் விளையாட்டு மைதானத்தில், 'உமன்ஸ் சோல் ஸ்பிரிட்' பெண்கள் அமைப்பின் சார்பில், நாளை மதியம், 3:00 மணிக்கு சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. 'நாட்டிற்கு நமது கவுரவம்' என்ற தலைப்பில் நடக்கும் நிகழ்ச்சியில், பெண்களுக்கான, 'ராம்ப் வாக்' உட்பட பல கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

பிக்பாஸ் வெற்றியாளர் கில்லி நட்டா, மாநில மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி, கர்நாடக மகளிர் காங்கிரஸ் தலைவி சவுமியா ரெட்டி, ஆனேக்கல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சிவண்ணா, இவரது மனைவி சரஸ்வதி, டி.சி.பி., சாமா மிஸ்ரா, வக்கீல் ரூபா ஷெட்டி உட்பட பல முக்கிய பிரமுகர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்கின்றனர்.

கலந்து கொள்ள விரும்புவோர் ஷம்பையா என்பவரை 94483 37010 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us