/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'கிரஹலட்சுமி' திட்டம் நிலுவை தொகை மகளிர் நலத்துறை அமைச்சர் உறுதி
/
'கிரஹலட்சுமி' திட்டம் நிலுவை தொகை மகளிர் நலத்துறை அமைச்சர் உறுதி
'கிரஹலட்சுமி' திட்டம் நிலுவை தொகை மகளிர் நலத்துறை அமைச்சர் உறுதி
'கிரஹலட்சுமி' திட்டம் நிலுவை தொகை மகளிர் நலத்துறை அமைச்சர் உறுதி
ADDED : மே 16, 2025 10:17 PM
தாவணகெரே: “'கிரஹலட்சுமி' திட்டத்தில் நிலுவையில் உள்ள தொகை விரைவில் டிபாசிட் செய்யப்படும்,” என, மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் தெரிவித்தார்.
தாவணகெரே, ஹரிஹாரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பட்ஜெட் தாக்கலின்போது நடந்த பணிகள் காரணமாக, பிப்ரவரி, மார்ச் ஆகிய இரண்டு மாதங்களுக்கான 'கிரஹலட்சுமி' திட்டத்தொகையை டிபாசிட் செய்யவில்லை.
இந்த தொகை விரைவில் டிபாசிட் செய்யப்படும். அதே சமயம், ஏப்ரல் மாதத்திற்கான தொகை டிபாசிட் செய்யப்பட்டுவிட்டது.
கிரஹலட்சுமி திட்டத்தை தேவையில்லாமல் பா.ஜ., விமர்சனம் செய்து வருகிறது. ஆனால், அவர்கள், இதே திட்டத்தை சில மாநிலங்களில் அறிவித்துள்ளனர்.
புதுடில்லியில் அறிவித்த அவர்களால் திட்டத்தை செயல்படுத்த முடியுமா என்பதை பார்ப்போம்.
பெலகாமில் மது நுால்கள் எரிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்படுவர்.
இதுபோன்ற சம்பவங்களை யாரும் செய்யக்கூடாது. இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளேன்.
கிரேட்டர் பெங்களூருவை பா.ஜ.,வினர் எதிர்ப்பதில் எந்த நியாயமும் இல்லை. பா.ஜ., சார்பில் தேசிய கொடி ஊர்வலம் நடத்தப்படுகிறது.
இதற்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால், அரசியல் செய்யாமல் இருக்க வேண்டும். அனைவருக்கும் தேச பக்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.