தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'சிலிண்டர் தட்டுப்பாடு சமாளிக்க விறகு அடுப்பு'

 'சிலிண்டர் தட்டுப்பாடு சமாளிக்க விறகு அடுப்பு'

 'சிலிண்டர் தட்டுப்பாடு சமாளிக்க விறகு அடுப்பு'


ADDED : மார் 30, 2026 04:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2026 04:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க மக்கள் விறகு அடுப்புகளை பயன்படுத்த வேண்டும்,'' என உணவுத்துறை அமைச்சர் முனியப்பா கூறி உள்ளார்.

இது குறித்து, நேற்று அவர் கூறியதாவது:

கர்நாடகாவில் நிலவும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசே காரணம். வீட்டு உபயோக சிலிண்டர்கள் வழக்கம் போல வழங்கப்படும். சிலிண்டர்கள், வாடிக்கையாளர்களின் வீடு தேடி வரும். எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு ஏற்கனவே அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. எனவே, சிலிண்டர் வாங்குவதற்கு யாரும் வரிசையில் நிற்க கூடாது. வர்த்தக சிலிண்டர் வினியோகம் 68 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

கல்வி நிறுவனங்கள், விடுதிகள், மருத்துவமனைகள் மற்றும் பிற அத்தியாவசிய நிறுவனங்களுக்காக 4,200 சிலிண்டர்களும்; அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், விமான நிலையம், ரயில், பஸ் உணவகங்களுக்கு 1,200 சிலிண்டர்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

பெங்களூரில் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிறது. நகரில் இருந்து 40 கி.மீ., தொலைவில் சென்றால் விறகு கிடைக்கும். தட்டுப்பாட்டை சமாளிக்க மக்கள், விறகு அடுப்புகளை பயன்படுத்த வேண்டும். அதிக விலைக்கு சிலிண்டர் விற்பனை செய்யும் வினியோகஸ்தர்களின் உரிமம் ரத்து செய்யப்படும். சிலிண்டர்களை பதுக்கி வைத்திருப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us