தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'சம்பிகே' வழித்தடத்தின் பணிமனை அக்குபேட்டையில் பணிகள் தீவிரம்

 'சம்பிகே' வழித்தடத்தின் பணிமனை அக்குபேட்டையில் பணிகள் தீவிரம்

 'சம்பிகே' வழித்தடத்தின் பணிமனை அக்குபேட்டையில் பணிகள் தீவிரம்


ADDED : மே 06, 2026 04:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2026 04:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரு புறநகர் ரயில் திட்டத்தில், 'சம்பிகே' வழித்தடத்தில் முதன்மை பணிமனை அமைப்பதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளன. நிலங்களை கையகப்படுத்துவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

விமான நிலையம் பெங்களூரில் நான்கு வழித்தடங்களில் புறநகர் ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. 149.348 கி.மீ., நீளத்திற்கு இந்த வழித்தடங்கள் அமைய உள்ளன. 2022 ஜூன் 20ல் பணிகள் துவக்கப்பட்டன. 40 மாதங்களில் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் நான்கு வழித்தடங்களில், 64 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு வழித்தடத்திற்கும் மலர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

'சம்பிகே' எனும் செண்பகப் பூ என்ற முதல் வழித்தடம் கே.எஸ்.ஆர்., பெங்களூரு முதல் விமான நிலையம் வழியாக தேவனஹள்ளி வரை 41 கி.மீ., நீளத்திற்கு அமைக்கப்படுகிறது.

'மல்லிகே' எனும் மல்லிகை என்ற இரண்டாவது வழித்தடமானது, பையப்பனஹள்ளி முதல் சிக்கபானவரா வரை 25 கி.மீ., நீளத்திற்கு அமைக்கப்படுகிறது.

'பாரிஜாதம்' என்ற மூன்றாவது வழித்தடமானது, கெங்கேரி முதல் ஒயிட்பீல்டு வரை 36 கி.மீ., நீளத்திற்கும்; 'கனகா' எனும் கனகாம்பரம் என்ற நான்காவது வழித்தடம் ஹீலாலிகே முதல் ராஜனுகுண்டே வரை 46 கி.மீ., நீளத்திற்கும் அமைக்கப்படுகிறது.

5 கிராமங்கள் இவற்றில் 'சம்பிகே' என்ற முதல் வழித்தடத்திற்கான முக்கியமான பணிமனையை தேவனஹள்ளி அருகே அக்குபேட்டையில் அமைக்க, இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வரும், 'கேரைடு' நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக 30,913 சதுர மீட்டர் நிலத்தை அது அடையாளம் கண்டுள்ளது.

தேவனஹள்ளி உட்பட ஐந்து கிராமங்களில் இந்த நிலங்களை உள்ளடக்கிய, 50 சொத்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை தனியாருக்கு சொந்தமானவை. சில சொத்துகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும் மாநில அரசுக்கும் சொந்தமானவை.

இந்த நிலங்களை கையகப்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கே.ஐ.ஏ.டி.பி-., எனும் கர்நாடக தொழிற்பகுதி மேம்பாட்டு வாரியம் கடந்த வாரம் வெளியிட்டது.

அடையாளம் காணப்பட்டுள்ள நிலங்களில் வேறு யாரும் எந்தவிதப் பணிகளும் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. நில உரிமையாளர்களிடம் இருந்து நிலத்தை முறைப்படி கையகப்படுத்தி, கேரைடு நிறுவனத்திடம் கே.ஐ.ஏ.டி.பி-., ஒப்படைக்கும்.

அதன்பின் அங்கு பணிமனையை கட்டமைக்கும் பணியை கேரைடு மேற்கொள்ளும். 2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின்படி, நியாயமான இழப்பீடு வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிமனைக்குச் செல்லும் வழித்தடத்திற்காக கூடுதல் நிலம் கையகப்படுத்தப்படும் என்றும் அதற்கான நிலங்களை அடையாளம் கண்டு அளவிடும் பணிகள் நடந்து வருவதாகவும் கே.ஐ.ஏ.டி.பி-., வட்டாரங்கள் தெரிவித்தன.ஆமை வேகத்தில் நடந்து வந்த புறநகர் ரயில் திட்டப் பணிகள் இப்போது வேகமெடுத்துள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us