/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பணியே கடவுள் என்பது துறவியரின் வாழ்க்கை
/
பணியே கடவுள் என்பது துறவியரின் வாழ்க்கை
ADDED : டிச 17, 2025 06:18 AM

மாண்டியா: ''பணியே கடவுள் என்பது துறவிகளுக்கு வெறும் முழக்கம் மட்டும் அல்ல; அது அவர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும்,'' என ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார்.
மாண்டியா மாவட்டம் மலவள்ளியில் உள்ள சாந்தி கல்லுாரி மைதானத்தில், நேற்று சுத்துார் மடத்தின் ஸ்ரீ சிவராத்திரி சிவயோகி சுவாமிகளின், 1066வது ஜெயந்தி மஹோத்சவத்தை, ஜனாதிபதி திரவுபதி முர்மு துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து சுவாமிகளின் நினைவு மலரை வெளியிட்டார். பின், அவர் பேசியதாவது:
நாளை ய இளைஞர்களை ஊக்குவிக்க, இத்தகைய மடங்கள் தேவை. கர்நாடகா மாநிலம் இத்தகைய மடங்களின் சேவையை கண்டு வருகிறது. 'காயகவே கைலா சம்' எனும் 'பணியே கடவுள்' என்பது, துறவிகளுக்கு வெறும் முழக்கம் மட்டும் அல்ல. அது அவர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதி.
வேகமான, நிச்சயமற்ற தன்மை நிறைந்த இன்றைய காலத்தில், இளைஞர்களிடம் தலைமைத்துவம் உருவாக வே ண்டும். 2047 ம் ஆண்டுக்குள், இந்தியாவில் பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக உள்ளடக்கம், மனித நேயம் போன்றவை இணைந்து செல்ல வேண்டும்.
சிவயோகியின் தியாகமும், ஆன்மிக சக்தியும் ஒளி விளக்கு போன்றவை. எட்டாம் நுாற்றாண்டில் மடத்தை நிறுவிய சிவயோகி, அசைக்க முடியாத குருவாக இருந்தார். இவரின் தொலைநோக்கு பார்வை தனித்துவமானது.
அவரின் வாரிசான சிவராத்திரி ராஜேந்திர சுவாமிகள், கல்வி மற்றும் சமூக வளர்ச்சியிலும், மதம், கல்வி, கலாசார வளர்ச்சியிலும் குறிப்பிடத்தக்க பங்கை கொண்டிருந்தார். அவரது போதனைகள் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக உள்ளன.
சமூகம், கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த சுத்துார் மடத்தின் ஜே.எஸ்.எஸ்., மகாவித்யா பீடம், நாட்டின் மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். நிலையான வளர்ச்சியின் அடிப்படையில் சுத்துார் மடம் ஒரு துாணாக நிற்கிறது. இவ்வாறு அவர் பேசினார். இந்த மஹோத்சவம் ஒரு வாரம் நடக்கிறது.

