/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.13 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா கடத்திய 6 பேர் கைது
/
ரூ.13 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா கடத்திய 6 பேர் கைது
ரூ.13 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா கடத்திய 6 பேர் கைது
ரூ.13 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா கடத்திய 6 பேர் கைது
ADDED : டிச 17, 2025 06:17 AM

தேவனஹள்ளி: பாங் காக்கில் இருந்து, 13 கோடி ரூபாய் மதிப்புள்ள உயர் ரக கஞ்சாவை, விமானத்தில் கடத்தி வந்த ஆறு பேர் கைது செய்யப்ப ட்டனர்.
பெங்களூரு ரூரல் தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு, தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து விமானம் ஒன்று நேற்று முன் தினம் வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த சிலர், உயர் ரக கஞ்சா கடத்தி வருவதாக, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
விமானத்தில் வந்திறங்கிய பயணியர் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில், ஐந்து பயணியர், தங்கள் உடைமைகளில் மறைத்து கடத்தி வந்த, 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் இதன்மதிப்பு, 10.70 கோடி ரூபாய். ஐந்து பயணியரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்றும் பாங்காக்கில் இருந்து வந்த விமானத்தில், 2.11 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆறு கிலோ எடையுள்ள உயர் ரக கஞ்சாவை கடத்தி வந்த, ஒரு பயணி சிக்கினார்.
மொத்தமாக ஆறு பேரை கைது செய்துள்ள சுங்கத்துறையினர், 12.81 கோடி ரூபாய் மதிப்புள்ள உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்து உள்ளனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, பெங்களூரில் அதிக விலைக்கு விற்பனை செய்ய, கஞ்சா கடத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

