/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
துவக்க பள்ளிகளின் நேரத்தை மாற்ற கோரிக்கை
/
துவக்க பள்ளிகளின் நேரத்தை மாற்ற கோரிக்கை
ADDED : டிச 17, 2025 06:05 AM
பெங்களூரு: மாநிலத்தில் தற்போது சீதோஷ்ண நிலை மாறி உள்ளது. எனவே, எல்.கே.ஜி., முதல் துவக்க பள்ளி வரையிலான மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, கற்றல் நேரத்தை தற்காலிகமாக மாற்றும்படி, பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவித்தல் துறைக்கு, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவித்தல் துறைக்கு, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் எழுதியுள்ள கடிதம்:
கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் சீதோஷ்ண நிலை, இயல்பை விட கணிசமான அளவு குறைந்து உள்ளது. குறிப்பாக, 14 மாவட்டங்களில் குளிர் காற்று வீசுவது அதிகரித்து உள்ளது. அதுதவிர பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
காலையில் மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் போது, கடுமையான குளிர் உள்ளது. குறைந்த வெப்பநிலை காரணமாக, இந்த காலகட்டத்தில் மாணவர்களின் உடல்நலம் பாதிக்க வாய்ப்பு உள்ளது.
அவர்களின் உடல் நலத்தை பாதுகாக்கும் வகையில், எல்.கே.ஜி., முதல் துவக்க பள்ளியிலும் படிக்கும் மாணவர்களுக்கு, பள்ளி நேரத்தை தற்காலிகமாக மாற்றி அமைக்க வேண்டும். இந்த நடவடிக்கையால் மாணவர்களின் ஆரோக்கியமும், நலனும் பாதுகாக்க உதவும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

