தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தொழிலாளி மர்மச்சாவில் திருப்பம் அடித்து கொன்ற நண்பர் கைது

 தொழிலாளி மர்மச்சாவில் திருப்பம் அடித்து கொன்ற நண்பர் கைது

 தொழிலாளி மர்மச்சாவில் திருப்பம் அடித்து கொன்ற நண்பர் கைது


ADDED : ஜூன் 15, 2026 10:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2026 10:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒயிட்பீல்டு: கட்டட தொழிலாளி மர்ம சாவு வழக்கில் திடீர் திருப்பமாக அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கட்டையால் அடித்து கொன்றது அம்பலமாகியுள்ளது.

பெங்களூரு ஒயிட்பீல்டு ஏ.சி.எஸ்., லே -- அவுட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் கடந்த 6ம் தேதி, கட்டட தொழிலாளி பாஷா, 58, மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

அவரது தலையில் மட்டும் காயம் இருந்தது. பக்கத்தில் மதுபான பாட்டில்களும் கிடந்ததால், குடிபோதையில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று போலீசார் நினைத்தனர். மர்ம சாவு வழக்குப்பதிவு செய்தனர். ஆனாலும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது, அதே கட்டடத்தில் தொழிலாளியாக வேலை செய்த சுந்தர், 55 என்பவர் அங்கும், இங்கும் சுற்றி திரிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை கண்காணித்த நிலையில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில், பாஷாவை கொலை செய்ததை ஒப்பு கொண்டார். கடந்த 5ம் தேதி இரவு பாஷாவும், சுந்தரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அங்கு கிடந்த மரக்கட்டையை எடுத்து, தலையில் அடித்து கொன்றது அம்பலமாகியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us