/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நண்பரை கழுத்தை அறுத்து கொன்ற தொழிலாளி கைது
/
நண்பரை கழுத்தை அறுத்து கொன்ற தொழிலாளி கைது
ADDED : அக் 08, 2025 12:05 AM
அம்ருதஹள்ளி : மனைவிக்கு 'மெசேஜ்' செய்ததால், நண்பரை கழுத்தை அறுத்துக் கொன்ற கட்டுமான தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ராஜு, 35; ரகு, 34. பெங்களூரு வீரண்ணபாளையாவில் தங்கி இருந்து, கட்டுமான பணிகள் செய்தனர். ஒரே மாநிலம் என்பதால், நண்பர்களாக பழகினர்.
ரகுவின் மனைவி மீது ராஜு ஆசைப்பட்டார். அவருக்கு மொபைல் போனில் அடிக்கடி மெசேஜ் அனுப்பி வந்தார். இதுபற்றி அறிந்த ரகு, ராஜுவை கண்டித்தார். அவர் கேட்கவில்லை.
நேற்று முன்தினம் மதியம் தங்கள் வசித்து வந்த கொட்டகையில் ரகுவும், ராஜுவும் மது அருந்தினர். அப்போது மெசேஜ் அனுப்புவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. ராஜுவின் கழுத்தை கத்தியால் அறுத்து, ரகு கொலை செய்தார். பின், அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இரவு சக தொழிலாளர்கள், கொட்டகைக்கு வந்து பார்த்தபோது ராஜு கொலையானது தெரிந்தது. அம்ருதஹள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தலைமறைவான ரகுவை போலீசார் தேடிவந்தனர்.
அவரது போன் சிக்னலை கண்காணித்தனர். நேற்று காலை பையப்பனஹள்ளி ரயில் நிலையம் அருகே சுற்றித்திரிந்த ரகுவை போலீசார் கைது செய்தனர்.