ADDED : செப் 19, 2026 02:23 AM

- நமது நிருபர் -: மேகி நுாடுல்ஸ் என்றாலே குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். அதிலும் ஹோட்டல்களில் இந்தோ - சைனீஸ் சுவையில் செய்யும் சில்லி பன்னீர் மேகி சூப்பரான டேஸ்ட் தர கூடியது. இதை வீட்டில் எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் நுாடுல்ஸ் - - 2 பாக்கெட்
மேகி மசாலா - பாக்கெட்
பன்னீர் - 100 கிராம்
வெங்காயம் - பெரியது 1
குடை மிளகாய் - 1
பூண்டு - 4 பற்கள்
பச்சை மிளகாய் - 2
சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்
ரெட் சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன்
தக்காளி சாஸ் - ஒரு டீஸ்பூன்
வினிகர் - அரை டீஸ்பூன்
சோள மாவு - ஒரு டீஸ்பூன்
உப்பு, மிளகு துாள் - தேவையான அளவு
செய்முறை: அடுப்பை ஆன் செய்து, அடி கனமான பாத்திரம் வைத்து, தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதித்து வரும் போது மேகி நுாடுல்சை சேர்த்து வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும். தண்ணீரை முழுமையாக வடிகட்டி மேகியை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய பனீர் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி எடுத்து கொள்ளவும். அதே கடாயில் பொடிசாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், குடை மிளகாய் சேர்த்து அதிக தீயில் வைத்து இரண்டு நிமிடங்கள் வேக விடவும்.
இப்போது சோயா, ரெட் சில்லி, தக்காளி சாஸ், வினிகர் சேர்த்து வதக்கவும். இதனுடன் மேகி மசாலா, தேவையான அளவு உப்பு, மிளகு துாள், கால் கப் தண்ணீர் ஊற்றி நன்கு கிளற வேண்டும். இந்த கலவை கொதிக்க துவங்கும் போது, தண்ணீரில் கரைத்து வைத்துள்ள சோளமாவு ஊற்றி கிளறவும். சாஸ் லேசாக கெட்டியானதும், வதக்கி வைத்துள்ள பனீர் துண்டுகள், வேகவைத்த மேகி நுாடுல்சை உடன் சேர்க்கவும்.
மசாலா அனைத்தும் நுாடுல்ஸ், பனீரில் ஒட்டும்படி மெதுவாக உடையாமல் நன்கு கிளறி, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, இரண்டு நிமிடங்களில் அடுப்பை அணைத்து விடவும்.
அவ்வளவு தான். சுவையான, காரசாரமான சில்லி பனீர் மேகி ரெடி. இதன் மேல் நறுக்கிய வெங்காய தாள் அல்லது கொத்தமல்லி இலை துாவி பரிமாறலாம்.
