/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முதலீட்டை ஈர்ப்பதில் தொடரும் 'எக்ஸ்' மோதல்
/
முதலீட்டை ஈர்ப்பதில் தொடரும் 'எக்ஸ்' மோதல்
ADDED : அக் 18, 2025 04:48 AM

பெங்களூரு: முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கேவும், ஆந்திர அமைச்சர் நர லோகேஷும் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் தொடர்ந்து வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம், தன் 'எக்ஸ்' பக்கத்தில் நர லோகேஷ், 'ஆந்திராவில் காரமான உணவுகள் மட்டும் பிரபலமானவை இல்லை. மாறாக, கோடிக்கணக்கிலான ரூபாயில் முதலீடுகளை ஈர்ப்பதிலும் பிரபலமானதாக விளங்குகிறது. இதை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை' என்றார்.
இதற்கு பதிலடியாக பிரியங்க் கார்கே நேற்று தன் 'எக்ஸ்' பக்கத்தில் குறிப்பிட்டதாவது:
எப்போதாவது தான் காரமான உணவுகளை சாப்பிட அனைவரும் விரும்புவர். ஆனால், சத்துகள் நிறைந்த உணவையே தினமும் உண்ண வேண்டும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். அண்டை மாநிலங்களில் கடன் தொகை 10 லட்சம் கோடி ரூபாயை நெருங்கிவிட்டது. எது நடந்தாலும் மற்றவர்கள் நம் மீது பொறாமைப்படும் போது, உண்மையில் சந்தோஷம் கிடைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த இருவரின் மோதலுக்கும் ஓய்வென்பதே கிடையாதா என சமூக வலைதளங்களில் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.