/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
யாத்கிரின் வெயில் தாக்கம் அதிகரிப்பு கை குழந்தைகளுக்கு சிறுநீரக பாதிப்பு
/
யாத்கிரின் வெயில் தாக்கம் அதிகரிப்பு கை குழந்தைகளுக்கு சிறுநீரக பாதிப்பு
யாத்கிரின் வெயில் தாக்கம் அதிகரிப்பு கை குழந்தைகளுக்கு சிறுநீரக பாதிப்பு
யாத்கிரின் வெயில் தாக்கம் அதிகரிப்பு கை குழந்தைகளுக்கு சிறுநீரக பாதிப்பு
ADDED : ஏப் 15, 2025 04:57 AM
யாத்கிர்: யாத்கிரில் வெயிலின் தாக்கத்தால் கைக்குழந்தைகளுக்கு சிறுநீரக பிரச்னைகள் ஏற்பட்டு உள்ளன. இதனால், மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
யாத்கிர் மாவட்டத்தில் கோடைக்காலம் துவங்கியது முதல் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால், மக்கள் மதிய வேளையில் வெளியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர். இந்த வெயிலால் அனைத்து வயதினரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
வெயிலின் தாக்கத்தால் புதிதாக பிறந்த கைக்குழந்தைகளுக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்னைகள் அதிகரித்து உள்ளன. யாத்கிர் மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள தாய் - சேய் பிரிவில், கடந்த 15 நாட்களாக சிறுநீர் கோளாறு பிரச்னை காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
தற்போது, தினமும் மூன்று முதல் ஐந்து கைக்குழந்தைகள் அனுமதிக்கப்படுகின்றன.
கடந்த நான்கு நாட்களில் மட்டும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக 10 கைக்குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
சிறுநீர் கழிப்பதில் பிரச்னை, நீர்ச்சத்து குறைபாடு, சிறுநீரக புண்கள், குடல் இறக்கம் போன்ற பிரச்னைகள் காரணமாக குழந்தைகள் அனுமதிக்கப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். இதன் காரணமாக மருத்துவமனை வளாகத்தில் ஒரு சிறப்பு வார்டு திறக்கப்பட்டு உள்ளது.
மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:
அதிகரிக்கும் வெப்பத்தால் குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இதன் மூலம் குழந்தைகளுக்கு சிறுநீரக பிரச்னைகள் ஏற்படுகிறது. இதிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க, தாய்மார்கள் சரியான நேரத்தில் தாய்ப்பால் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும். குழந்தைகள் லேசான ஆடையை அணிய வேண்டும். பெற்றோர் தங்கள் குழந்தைகளை முறையாக பார்த்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூறினர்.