/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'பேச வேண்டிய இடத்தில் பேசுவேன்' என யதீந்திராவுக்கு... முதல்வர் பதவி விவகாரத்தில் சிவகுமார் தடாலடி கருத்து 'இனி பொறுக்க மாட்டோம்' என ஆதரவாளர்கள் ஆவேசம்
/
'பேச வேண்டிய இடத்தில் பேசுவேன்' என யதீந்திராவுக்கு... முதல்வர் பதவி விவகாரத்தில் சிவகுமார் தடாலடி கருத்து 'இனி பொறுக்க மாட்டோம்' என ஆதரவாளர்கள் ஆவேசம்
'பேச வேண்டிய இடத்தில் பேசுவேன்' என யதீந்திராவுக்கு... முதல்வர் பதவி விவகாரத்தில் சிவகுமார் தடாலடி கருத்து 'இனி பொறுக்க மாட்டோம்' என ஆதரவாளர்கள் ஆவேசம்
'பேச வேண்டிய இடத்தில் பேசுவேன்' என யதீந்திராவுக்கு... முதல்வர் பதவி விவகாரத்தில் சிவகுமார் தடாலடி கருத்து 'இனி பொறுக்க மாட்டோம்' என ஆதரவாளர்கள் ஆவேசம்
ADDED : அக் 25, 2025 05:16 AM

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சித்தராமையாவுக்கு பின், சிவகுமார் முதல்வர் ஆவார் என, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கூறுகின்றனர். சித்தராமையாவே 5 ஆண்டுகளும் முதல்வர் என்று, அவரது ஆதரவு அமைச்சர்களும் எம்.எல்.ஏ.,க்களும் கூறுகின்றனர்.
இந்த கோஷத்தால் கட்சிக்கு பாதகம் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதனால், முதல்வர் பதவி குறித்து யாரும் பேச கூடாது என்று கட்சி மேலிடம் உத்தரவிட்டது.
ஒழுக்கம் இதையும் மீறி பேசிய சிவகுமார் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் இக்பால் உசேன், பசவராஜ் சிவகங்காவுக்கு விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.
இரண்டு நாட்களுக்கு முன்பு, பெலகாவியில் நடந்த நிகழ்ச்சியில், சித்தராமையாவின் மகனான காங்கிரஸ் எம்.எல்.சி., யதீந்திரா பேசுகையில், 'சித்தராமையாவுக்கு பின், அஹிந்தா சமூகத்தை ஒருங்கிணைக்கும் திறன் கொண்டவர் பொதுப் பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி. அவருக்கு முதல்வராகும் தகுதி உள்ளது' என்றார்.
யதீந்திராவின் கருத்து குறித்து சிவகுமார், பெங்களூரில் நேற்று கூறுகையில், ''யதீந்திரா கூறிய கருத்து பற்றி, நான் இப்போது எதுவும் பேச மாட்டேன். நான் எதை பேச விரும்புகிறேனோ, அதை, பேச வேண்டிய இடத்தில் பேசுவேன். கட்சி சொல்படி ஒழுக்கமாக நடக்கிறேன். ஒழுக்கம் தான் காங்கிரசின் முன்னுரிமை,'' என்றார்.
யதீந்திராவின் கருத்து, துணை முதல்வர் தரப்பை எரிச்சலடைய செய்துள்ளது.
குழப்பம் மத்துார் எம்.எல்.ஏ., உதய் கூறுகையில், ''ஊடகம் முன், பொது இடத்திலும் யார் யாரோ என்னென்னவோ பேசுகின்றனர். அவர்கள் பேச்சை எல்லாம், காது கொடுத்து கேட்க வேண்டியது இல்லை. சிவகுமார் கண்டிப்பாக முதல்வர் ஆவார். நவம்பர் புரட்சி நடக்குமா என்பதை முடிவு எடுக்க வேண்டியது காங்கிரஸ் மேலிடம். சித்தராமையா அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி. அவரது வழிகாட்டுதல் காங்கிரஸ் கட்சிக்கு தேவை. முதல்வர் பதவியில் இருந்து அவரை இறக்கி விட வேண்டும் என்று, நாங்கள் யாராவது கூறினோமா?'' என்றார்.
குனிகல் எம்.எல்.ஏ., ரங்கநாத் கூறுகையில், ''சிவகுமார் கண்டிப்பாக முதல்வர் ஆவார். இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. எல்லாவற்றையும் மேலிடம் பார்த்துக் கொண்டு இருக்கிறது. தேவையின்றி பேசி யாரும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்,'' என்றார்.
தைரியம் சென்னகிரி எம்.எல்.ஏ., பசவராஜ் சிவகங்கா கூறுகையில், ''முதல்வர் பதவி குறித்து பேச மேலிடம் தடை விதித்துள்ளது. இதையும் மீறி யதீந்திரா பேசி உள்ளார். அப்படி என்றால் நாங்களும் முதல்வர் பதவி குறித்து பேசுவோம். இனியும் பொறுமையாக இருக்க மாட்டோம்,'' என்றார்.
சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா கூறுகையில், ''சதீஷ் ஜார்கிஹோளிக்கு முதல்வர் ஆகும் தகுதி உள்ளது என்று, யதீந்திரா கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. கட்சி மேலிடம் எதுவும் சொல்லவில்லையே. இந்திராவுக்கு பின், காங்கிரஸ் கட்சியை தலைமை தாங்குவது என்று பிரச்னை வந்தது. அதை கட்சி திறம்பட சமாளித்தது. எல்லாவற்றையும் சமாளிக்கும் தைரியம், கட்சி மேலிடத்திற்கு உள்ளது,'' என்றார்.

