/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
யஷ்வந்த்பூர் பா.ஜ., வேட்பாளரை அறிவித்த எடியூரப்பா; விட்டு கொடுக்க மறுக்கும் ம.ஜ.த.,வின் ஜவராயி கவுடா
/
யஷ்வந்த்பூர் பா.ஜ., வேட்பாளரை அறிவித்த எடியூரப்பா; விட்டு கொடுக்க மறுக்கும் ம.ஜ.த.,வின் ஜவராயி கவுடா
யஷ்வந்த்பூர் பா.ஜ., வேட்பாளரை அறிவித்த எடியூரப்பா; விட்டு கொடுக்க மறுக்கும் ம.ஜ.த.,வின் ஜவராயி கவுடா
யஷ்வந்த்பூர் பா.ஜ., வேட்பாளரை அறிவித்த எடியூரப்பா; விட்டு கொடுக்க மறுக்கும் ம.ஜ.த.,வின் ஜவராயி கவுடா
ADDED : ஜூலை 30, 2025 08:53 AM

அடுத்த சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகள் இருக்கும் நிலையில், யஷ்வந்த்பூர் பா.ஜ., வேட்பாளர் பெயரை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா இப்போதே அறிவித்ததால், ம.ஜ.த.,வின் ஜவராயி கவுடா கோபம் கொண்டுள்ளார். 'நான் தான் வேட்பாளர்' என்று முரண்டு பிடிக்கிறார்.
பா.ஜ., முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் தீவிர ஆதரவாளரான யஷ்வந்த்பூரை சேர்ந்த கட்சி பிரமுகர் ருத்ரேஷ்.
அவர் பிறந்த நாளில், அவரது வீட்டுக்கு இம்மாதம் 26ம் தேதி சென்று எடியூரப்பா வாழ்த்துத் தெரிவித்தார்.
அப்போது பேசிய எடியூரப்பா, 'அடுத்த சட்டசபை தேர்தலில் யஷ்வந்த்பூர் தொகுதியில் ருத்ரேஷ், அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
'அவரின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. இவரை எம்.எல்.ஏ.,வாக்க, தொகுதி மக்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டனர்' என்று கூறினார்.
அதிருப்தி கூட்டணி கட்சியான ம.ஜ.த., இருக்கும்போது, தன் ஆதரவாளர் என்பதற்காக ருத்ரேஷை வேட்பாளராக அறிவித்தது, கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு ருத்ரேஷ் கூறுகையில், ''நான், யஷ்வந்த்பூர் தொகுதியில் போட்டியிட, 2008 முதல் முயற்சித்து வருகிறேன். ஆனால் கட்சியின் உத்தரவை ஏற்று, கட்சியை வளர்க்க ராம்நகருக்கு சென்றேன்.
''இத்தொகுதியில் யாருக்கு 'சீட்' வழங்க வேண்டும் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும். என் பெயரை எடியூரப்பா அறிவித்தபோது, ம.ஜ.த.,வின் ஜவராயி கவுடாவும் அங்கு தான் இருந்தார். என் மீதான அன்பால், பெயரை அறிவித்திருக்கலாம்,'' என்றார்.
இதற்கிடையில், பெங்களூரில் ம.ஜ.த., - எம்.எல்.சி., ஜவராயி கவுடா நேற்று கூறியதாவது:
எடியூரப்பா மூத்த அரசியல்வாதி, முதல்வராக இருந்தவர். திடீரென யஷ்வந்த்பூர் வேட்பாளரை அறிவித்தது, ம.ஜ.த., தொண்டர்கள் இடையே குழப்பத்தை மட்டுமின்றி, அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து தோல்வி பா.ஜ., கூட்டணி தலைவர்கள், ம.ஜ.த.,வின் தேவகவுடா, குமாரசாமி இணைந்து யாரை வேட்பாளராக அறிவிக்கிறார்களோ, அவரின் வெற்றிக்கு பாடுபடுவோம். யஷ்வந்த்பூர் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி.
ஆனால், எடியூரப்பாவின் பேச்சு, எனக்கு மன சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இத்தொகுதி ம.ஜ.த., பலம் வாய்ந்த தொகுதியாகும். ஒருவேளை குமாரசாமியோ, நிகில் குமாரசாமியோ இத்தொகுதியில் போட்டியிட்டால், அவர்களுக்கு முழு ஆதரவு அளிப்பேன். எக்காரணத்தை கொண்டும் தொகுதியை விட்டுக்கொடுக்க மாட்டேன்.
இத்தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளேன். வரும் சட்டசபை தேர்தலில், யஷ்வந்த்பூர் ம.ஜ.த., வேட்பாளர் நான் தான். என் தொகுதியை எதற்காக விட்டுக் கொடுக்க வேண்டும்?
தொகுதி மக்கள் என் மீது அன்பு வைத்து உள்ளனர். தனித்து நின்றாலும், என்னை வெற்றி பெற வைத்துவிடுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -