தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ எடியூரப்பா 84 வது பிறந்த நாள் ஷிகாரிபுராவில் பிரமாண்டம் 

 எடியூரப்பா 84 வது பிறந்த நாள் ஷிகாரிபுராவில் பிரமாண்டம் 

 எடியூரப்பா 84 வது பிறந்த நாள் ஷிகாரிபுராவில் பிரமாண்டம் 


ADDED : பிப் 28, 2026 06:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2026 06:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஷிவமொக்கா: பா.ஜ., முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின், 84வது பிறந்த நாள், ஷிவமொக்காவின் ஷிகாரிபுராவில் நேற்று பிரமாண்டாக கொண்டாடப்பட்டது.

கர்நாடகாவில், பா.ஜ.,வை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியவர் என்ற பெருமைக்கு சொந்தகாரர் முன்னாள் முதல்வர் எடியூரப்பா.

இவருக்கு நேற்று, 84 வது பிறந்தநாள். மத்திய அமைச்சர்கள், கர்நாடக பா.ஜ., தலைவர்கள், கூட்டணியில் உள்ள ம.ஜ.த.,வின் தேவகவுடா, குமாரசாமி உள்ளிட்ட தலைவர்கள், முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் எடியூரப்பாவுக்கு தொலைபேசி மூலமும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தனக்கு அரசியல் வாழ்வு கொடுத்த ஷிவமொக்காவின் ஷிகாரிபுராவில், தன் பிறந்தநாளை குடும்பத்தினருடன் இணைந்து, எடியூரப்பா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினார்.

ஹுச்சாராயசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம்,ஏழை பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கினார்.

இதில் அவரது மகன்களான ஷிவமொக்கா எம்.பி., ராகவேந்திரா, கர்நாடக பா.ஜ., தலைவரும், ஷிகாரிபுரா எம்.எல்.ஏ.,வுமான விஜயேந்திரா ஆகியோர் பங்கேற்றனர்.

மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, எம்.பி.,க்கள் மோகன், கோவிந்த் கார்ஜோள், முன்னாள் அமைச்சர்கள் ஸ்ரீராமுலு, ரவி, இன்னாள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், மடாதிபதிகள், 70 க்கும் மேற்பட்ட சங்கங்களின் தலைவர்கள் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றனர். எடியூரப்பா கடந்து வந்த பாதை தொடர்பான காணாளி வெளியிடப்பட்டது.

நிறைய சேவை நிகழ்ச்சியில் விஜயேந்திரா பேசியதாவது:

மாண்டியா மாவட்டம் புக்கனகெரேயில் பிறந்தாலும், ஷிகாரிபுராவை தன் கர்மா பூமியாக எடியூரப்பா மாற்றினார். நான்கு முறை முதல்வராக பணியாற்றி உள்ளார். எம்.எல்.ஏ., - எம்.பி., கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக சிறப்பாக பணியாற்றி, மாநிலத்திற்கு நிறைய சேவைகள் செய்துள்ளார்.

அனைத்து சமூகங்களின் குரலாக ஒலித்தார். தனக்கு பலம் அளித்த விவசாயிகளை அவர் ஒரு போதும் மறந்தது இல்லை.

விவசாயிகள் பெயரில் முதல்வராக பதவியேற்ற ஒரே நபரும் எடியூரப்பா தான். அவரையும், ஷிகாரிபுரா மக்களையும் பிரிக்கவே முடியாது.

பிரதமர் மோடியின் தலைமையில் பா.ஜ., உலகின் மிகப்பெரிய கட்சியாக மாறி உள்ளது. நாம் அனைவரும் அவரது தலைமையின் கீழ் பணியாற்றுவதை நினைத்து பெருமைப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டிற்கு திட்டம் எம்.பி., கோவிந்த் கார்ஜோள் பேசுகையில், ''எடியூரப்பா போன்ற தலைவர் கிடைப்பது அரிது. கடந்த, 50 ஆண்டுகளாக அரசியலில் சேவை செய்து உள்ளார். விவசாயிகள், பெண்களுக்காக பல திட்டங்களை கொண்டு வந்து உள்ளார். அவர், 100 ஆண்டுகள் உடல் ஆரோக்கியத்துடன் வாழ கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். அவரது அரசியல் சேவையை கொண்டாடும் வகையில் மே மாதம் சித்ரதுர்காவில் மாநாடு நடத்த திட்டமிட்டு உள்ளோம்,'' என்றார்.

பிறந்தநாளை ஒட்டி ரங்கோலியில் வரையப்பட்டு இருந்த, எடியூரப்பாவின் உருவம் அனைவரையும் கவர்ந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us