தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மின் கட்டண உயர்வு எடியூரப்பா கண்டனம்

 மின் கட்டண உயர்வு எடியூரப்பா கண்டனம்

 மின் கட்டண உயர்வு எடியூரப்பா கண்டனம்


ADDED : ஏப் 18, 2026 11:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2026 11:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிக்கமகளூரு: ''மாநில அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இது, சரியான முடிவு அல்ல. மின் கட்டண உயர்வை திரும்ப பெற்று, மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள்,'' என, முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறினார்.

சிக்கமகளூரில் அவர் அளித்த பேட்டி:

ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால், மக்கள் பரிதவிக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில், மாநில அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இது, நிச்சயம் சரியான முடிவு அல்ல; சரியாக ஆட்சி நடத்த தெரியாமல், மின் கட்டணத்தை கண் மூடித்தனமாக உயர்த்தியுள்ளனர்.

மாநில அரசு உடனடியாக மின் கட்டண உயர்வை திரும்ப பெற்று, மக்களை நிம்மதியாக வாழ விட வேண்டும். தொடர்ந்து விலை உயர்த்தப்பட்டால், சாதாரண மக்கள் எப்படி வாழ்வது. அவர்களுக்கு சுமையை ஏற்படுத்தக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us