தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ யஷ்வந்த்பூர் - பன்னரகட்டா பூங்கா: முத்யாலா மடுவுக்கு ஒரு நாள் சுற்றுலா

 யஷ்வந்த்பூர் - பன்னரகட்டா பூங்கா: முத்யாலா மடுவுக்கு ஒரு நாள் சுற்றுலா

 யஷ்வந்த்பூர் - பன்னரகட்டா பூங்கா: முத்யாலா மடுவுக்கு ஒரு நாள் சுற்றுலா


ADDED : ஏப் 24, 2026 04:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2026 04:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரு பன்னரகட்டா பூங்கா, முத்யாலா மடுவுக்கு கர்நாடக மாநில சுற்றுலா மேம்பாட்டு ஆணையம், ஒரு நாள் சுற்றுலாவை அறிவித்துள்ளது.

ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

கே.எஸ்.டி.டி.சி., என்ற, கர்நாடக மாநில சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் சார்பில், பல ஆண்டுகளாக பல்வேறு சுற்றுலா திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. இம்முறை கோடை காலத்தை ஒட்டி, பன்னரகட்டா உயிரியல் பூங்கா மற்றும் முத்யாலா மடுவுக்கு, ஒரு நாள் சுற்றுலா அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சுற்றுலாவில், செவ்வாய்கிழமை தவிர மற்ற நாட்களில், பெங்களூரு யஷ்வந்த்பூரில் இருந்து காலை, 7:15 மணிக்கு புறப்பட்டு, 7:30க்கும் கெம்பே கவுடா பஸ் நிலையம், 7:45க்கு சாந்திநகர் பஸ் நிலையம், 8:00 மணிக்கு ஜெயநகர் பஸ் நிலையத்தில் இருந்தும் சுற்றுலா பயணியர் அழைத்துச் செல்லப்படுவர்.

பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் சபாரி, பட்டாம்பூச்சி பூங்கா, முத்யாலா மடுவில் படகு சவாரி, சூரிய அஸ்தமனத்தை பார்த்து ரசித்து விட்டு மீண்டும் புறப்பட்ட இடத்திலேயே பயணியர் இறக்கிவிடப்படுவர்.

இந்த சுற்றுலாவில் ஒருவருக்கு 1,680 ரூபாய் கட்டணம். இந்த கட்டணத்தில், உயிரியல் பூங்கா, சபாரி, பட்டாம்பூச்சி பூங்கா நுழைவு கட்டணம், முத்யாலா மடுவுவில் படகு சவாரி, காலை சிற்றுண்டி, மாலை தின்பண்டங்கள் உள்ளிட்டவை அடங்கும்.

www.kstdc.com என்ற இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 080 - 4334 4334 / 35 என்ற தொலைபேசியிலும், 89706 50070, 89706 50075, 89706 50021 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us