ADDED : ஜூன் 21, 2025 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
''உலக அளவில் இந்தியா தான், யோகாவின் குருவாக உள்ளது. யோகாவால் உலக நாடுகள் நம் நாட்டை திரும்பிப் பார்க்கின்றன,'' என மாண்டியா மாவட்ட கலெக்டர் குமார் தெரிவித்தார்.
ஹாவேரி, ஹங்கலை சேர்ந்த ராஜு பெட்கர், நேற்று நீச்சல் குளத்தில் தண்ணீரில் பத்மாசனம், ஷவாசனம் என பல ஆசனங்களை மணிக்கணக்கில் செய்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
தார்வாடில் உள்ள போலீசாரின் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில், நேற்று காலை 6:30 மணி முதல் 7:15 மணி வரை, 105 மாணவ - மாணவியர் யோகாசனங்கள் செய்தனர். இப்பள்ளியில் 25 ஆண்டுகளாக யோகா பயிற்சி அளிக்கின்றனர்.

