/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆக., 16, 17, 18ல் ராஜ்பவனை பார்க்கலாம்
/
ஆக., 16, 17, 18ல் ராஜ்பவனை பார்க்கலாம்
ADDED : ஆக 13, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, வரும் 16, 17, 18 ஆகிய தேதிகளில், ராஜ்பவனை சுற்றிப்பார்க்க பொது மக்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இம்மூன்று நாட்கள் மாலை 6:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். அடையாள அட்டையுடன் வருபவர்கள் அனுமதிக்கப்படுவர். ராஜ்பவனுக்குள் வரும் ஒவ்வொருவரும் கட்டாயமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். பாதுகாப்பு அதிகாரிகள் கூறும் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும்.
மொபைல் போன், மடிக்கணினி, கேமரா உட்பட எந்தவித எலக்ட்ரிக் சாதனங்கள், கூர்மையான பொருட்கள், தின்பண்டங்கள், பைகளை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.