/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மஞ்சள் காமாலையால் இளம் நடிகர் மரணம்
/
மஞ்சள் காமாலையால் இளம் நடிகர் மரணம்
ADDED : ஆக 06, 2025 12:24 AM

பெங்களூரு: பிரபல கன்னட நடிகரும், தயாரிப்பாளருமான ஆனேக்கல் பால்ராஜின் மகன் சந்தோஷ் பால்ராஜ், 34, நேற்று காலமானார்.
கன்னடத்தில் நடிகர் தர்ஷன் நாயகனாக நடித்த கரியா திரைப்படத்தை தயாரித்தவர் ஆனேக்கல் பால்ராஜ். இந்த படம் வசூலை அள்ளியது.
தர்ஷனின் தொழில் வாழ்க்கையில் திருப்புமுனையாக இருந்தது, இப்படம்தான்.
ஆனேக்கல் பால்ராஜ், தன் மகன் சந்தோஷ் பால்ராஜையும், திரையுலகுக்கு அழைத்து வந்தார். கரியா 2, கெம்பா, பர்க்லி, சத்யம் உட்பட பல படங்களில் நாயகனாக நடித்தார்.
இந்நிலையில் மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்ட சந்தோஷ், பெங்களூரின், குமாரசாமி லே - அவுட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை பலனின்றி நேற்று காலை, சந்தோஷ் உயிரிழந்தார்.வளர்ந்து வரும் நிலையில் மகன் இறந்ததால், தயாரிப்பாளர் ஆனேக்கல் பால்ராஜ் வேதனையில் உள்ளார்.