தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு இளம் ஜோடி துாக்கிட்டு தற்கொலை

 காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு இளம் ஜோடி துாக்கிட்டு தற்கொலை

 காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு இளம் ஜோடி துாக்கிட்டு தற்கொலை


ADDED : ஏப் 03, 2026 04:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2026 04:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாம்ராஜ்நகர்: காதல் திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இளம் ஜோடி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

சாம்ராஜ்நகர் மாவட்டம் பாலாறு கிராமத்தை சேர்ந்தவர் நாகேந்திரா, 21. இவர் அதே கிராமத்தை சேர்ந்த நதியா, 19, என்பவரை உண்மையாக காதலித்து வந்தார்.

இவர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். ஆனால், இவர்களது காதலுக்கு இரு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவிக்கவில்லை. இருவரும் வீட்டை வீட்டு ஓடுவதற்கு முடிவு செய்தனர்.

கடந்த மாதம், 29ம் தேதி நாகேந்திரா, நதியாவை அழைத்து கொண்டு, பொன்னாச்சி கிராமத்தில் உள்ள தன் தாத்தா வீட்டுக்கு வந்தார். இச்சமயத்தில், நதியாவை அவரது குடும்பத்தினர் தேடினர்.

எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால், அவரது பெற்றோர் நதியா காணாமல் போனதாக, எம்.எம்., ஹில்ஸ் பெட்டா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசில் புகார் அளித்தது, இ ளம் ஜோடிக்கு தெரிய வந்தது. இருவரும் மிகவும் பயந்து உள்ளனர்.

போலீசிடம் சிக்கினால் என்ன செய்வார்களோ என்று பயந்தனர். அதுபோல, இரு வீட்டாரும் நம்மை நிம்மதியாக வாழவிடமாட்டார்கள் என்றும் மு டிவு செய்தனர்.

இதனால், இருவரும் வேறு வழியின்றி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தகவல் அறிந்த வந்த போலீசார், இருவரின் உடலையும் மீட்டனர்.

பிரேத பரிசோதனை செய்வதற்கு உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us