/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தனக்கு தானே இரங்கல் போஸ்டர் வெளியிட்ட இளைஞர்
/
தனக்கு தானே இரங்கல் போஸ்டர் வெளியிட்ட இளைஞர்
ADDED : ஏப் 06, 2025 07:49 AM

பெங்களூரு : மூன்று ஆண்டுகளாக தேடியும், வேலை கிடைக்காததால் விரக்தி அடைந்த இளைஞர் ஒருவர், தனக்கு தானே இரங்கல் போஸ்டர் அச்சடித்து வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளத்தில் வைரலானது.
பெங்களூரில் வசிக்கும் பிரசாந்த் ஹரிதாஸ், 32, வேலை தேடி வந்தார். மூன்று ஆண்டுகளாக அலைந்தும், வேலை கிடைக்கவில்லை. பல நிறுவனங்களில், ஏறி இறங்கியும் பயன் இல்லை. வேலை கிடைக்காமல் விரக்தி அடைந்த பிரசாந்த் ஹரிதாஸ், தனக்கு தானே இரங்கல் போஸ்டர் அச்சடித்து வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், 'முதலாளிகளுக்கு நன்றி, என் விண்ணப்பத்தை புறக்கணித்ததற்கு நன்றி, வேலைக்காக முயற்சித்து என் நேரம் மற்றும் பணத்தை வீணாக்கியதற்கு நன்றி.
'இந்த போஸ்டரை பார்த்த பின், யாரும் எனக்கு வேலை தரமாட்டார்கள் என்பது, எனக்கு நன்றாகவே தெரியும்.
'வேலை தேடியே நான் செத்துவிட்டேன். நான் தற்கொலை செய்து கொள்ளமாட்டேன். வாழ்க்கையை நான் நேசிக்கிறேன்' என கூறியுள்ளார்.

