/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வேலை செய்த வீட்டில் திருடிய இளம்பெண் கைது
/
வேலை செய்த வீட்டில் திருடிய இளம்பெண் கைது
ADDED : நவ 28, 2025 05:47 AM

கோனணகுண்டே: பெங்களூரு கோனணகுண்டே ஆர்.பி.ஐ., லே - அவுட்டில் வசிப்பவர் ராஜி, 50. இவரது வீட்டில் ஆந்திராவின் கடபாவை சேர்ந்த சோனியா, 26 என்பவர் வீட்டு வேலை செய்தார். கடந்த அக்டோபர் 2ம் தேதி ராஜியின் வீட்டு அலமாரியில் இருந்த 100 கிராம் நகை, 8 லட்சம் ரூபாய் திருட்டு போனது.
இதுகுறித்து கோனணகுண்டே போலீசில் புகார் செய்தார். இந்நிலையில் திடீரென சோனியா வேலையை விட்டு நின்றார்.
இதனால் அவர் மீது சந்தேகம் இருப்பதாக போலீசில், ராஜி கூறினார். விசாரணை நடத்திய போலீசார், மைலசந்திராவில் வாடகை வீட்டில் வசித்த ராஜியை, நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் இருந்து 70 கிராம் நகைகள், 8 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டது.
இதற்கு முன்பும் வேலை செய்த வீடுகளில் திருடிய வழக்கில், பையப்பனஹள்ளி, ஹென்னுார் போலீசாரால் சோனியா கைது செய்யப்பட்டு இருந்தார்.
ஜாமினில் வந்த அவர் திருந்தாமல், திருடுவதை தனது தொழிலாக வைத்திருந்ததும் தெரிந்தது.

