தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மூளையில் ரத்தக்கசிவு இளம்பெண் உயிரிழப்பு

 மூளையில் ரத்தக்கசிவு இளம்பெண் உயிரிழப்பு

 மூளையில் ரத்தக்கசிவு இளம்பெண் உயிரிழப்பு


ADDED : ஏப் 28, 2026 04:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 28, 2026 04:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹாசன்: தாயுடன் அரட்டை அடிக்கும் போது, இளம் பெண்ணுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதில், கோமாவுக்கு சென்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஹாசன் மாவட்டம், பேலுார் தாலுகாவின், பன்டிலக்கனகொப்பலு கிராமத்தில் வசிப்பவர் கங்காதர். இவரது மனைவி சரோஜா. தம்பதியின் மகள் ஸ்வேதா, 25. மென் பொறியாளரான இவர், கடந்த மூன்று ஆண்டுகளாக ஹாசனின், 'மேக்னா சாப்ட்' என்ற நிறுவனத்தில் பணியாற்றினார்.

ஸ்வேதா கடந்த 25ம் தேதி, பணிக்கு சென்று வீடு திரும்பினார். மாலையில் தாயுடன் சிரித்து பேசி, அரட்டை அடித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஆனால் மருத்துவமனைக்கு வருவதற்குள், ஸ்வேதா கோமா நிலைக்கு சென்றார்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவரது மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதாக கூறினர். தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி, ஸ்வேதாவின் மூளை செயலிழந்ததில், நேற்று அவர் உயிரிழந்தார்.

மகளின் இழப்பு ஏற்படுத்திய துயரத்திலும், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். ஆனால், அவரது உடல்நிலை ஆரோக்கியமாக இல்லாத காரணத்தால், உடல் உறுப்புகளை தானம் செய்ய முடியவல்லை.

எந்த நோயும் இல்லாமல், ஆரோக்கியமாக இருந்த ஸ்வேதாவுக்கு திடீரென மூளை ரத்தக்கசிவுக்கு ஆளானது, பெற்றோரை மட்டுமின்றி, கிராமத்தினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us