/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
திருமணத்தை தடுக்கும் வாலிபர் போலீசில் இளம்பெண் புகார்
/
திருமணத்தை தடுக்கும் வாலிபர் போலீசில் இளம்பெண் புகார்
திருமணத்தை தடுக்கும் வாலிபர் போலீசில் இளம்பெண் புகார்
திருமணத்தை தடுக்கும் வாலிபர் போலீசில் இளம்பெண் புகார்
ADDED : ஜூன் 04, 2025 01:21 AM
மாண்டியா : கடந்த நான்கு ஆண்டுகளாக, தன் திருமணத்தை தடுத்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசில் இளம் பெண் ஒருவர், புகார் அளித்து உள்ளார்.
மாண்டியா மாவட்டம், சிக்கபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணா. இவருக்கும், லாவண்யா என்பவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நிச்சயதார்த்தத்தின் போது, இருவரும் சேர்ந்து, 'செல்பி' படங்கள் எடுத்து கொண்டனர்.
ஆனால், நாளடைவில் பாலகிருஷ்ணா நடத்தையில் லாவண்யாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
அவர்களும் விசாரித்த போது, பாலகிருஷ்ணாவின் நடத்தை சரியில்லை என்பது தெரிந்தது. உடனடியாக திருமணத்தை நிறுத்தினர்.இதனால் கோபமடைந்த பாலகிருஷ்ணா, இளம்பெண்ணுக்கு தொந்தரவு கொடுக்க துவங்கினார்.
லாவண்யாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டால், மாப்பிள்ளை வீட்டினரின் மொபைல் போன் நம்பரை தெரிந்து கொண்டு, பாலகிருஷ்ணாவும், லாவண்யாவும் எடுத்து கொண்ட செல்பி படத்தை அனுப்பி, எங்களுக்குள் உறவு உள்ளது என பொய் சொல்லி நிறுத்தி வந்துள்ளார்.
கடைசியாக கடந்த மாதம் 5ம் தேதி மத்துாரின் அபலவாடி கிராமத்தை சேர்ந்த இளைஞருக்கும், லாவண்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்க பேச்சு நடத்தினர்.
இதை அறிந்த பாலகிருஷ்ணா, நிச்சயிக்கப்பட்ட வாலிபரின் மொபைல் போனுக்கு, லாவண்யாவின் செல்பி படங்களை அனுப்பி நிறுத்தினார். அதன்பின், மே 7ம் தேதி காய்கறிகள் வாங்க சந்தைக்கு நடந்து சென்று கொண்டிருந்த லாவண்யாவை, பாலகிருஷ்ணா தடுத்து நிறுத்தி, 'நீ என்னை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள விடமாட்டேன். உனக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டால், நிறுத்தி விடுவேன். உன்னையும் கொன்று விடுவேன்' என்று மிரட்டி உள்ளார்.
இவ்வாறு கடந்த நான்கு ஆண்டுகளாக, ஏழு வரன்களை தடுத்து நிறுத்தி வந்துள்ளார். இதனால் வெறுப்படை லாவண்யா மற்றும் அவரது குடும்பத்தினர், நேற்று கெரகோடு போலீசில் புகார் செய்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார், பாலகிருஷ்ணாவை தேடி வருகின்றனர்.