/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'ஹோம்ஸ்டே'யில் தங்கிய இளம்பெண் மர்மச்சாவு
/
'ஹோம்ஸ்டே'யில் தங்கிய இளம்பெண் மர்மச்சாவு
ADDED : அக் 27, 2025 03:51 AM

சிக்கமகளூரு: 'ஹோம்ஸ்டே' குளியல் அ றையில், இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
ஹாசன் மாவட்டம், பேலுார் தாலுகாவின் தேவலாபுரா கிராமத்தை சேர்ந்த தேவராஜு கவுடா மகள் ரஞ்சிதா. இவர் பெங்களூரில், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். 27.
இவரது சகோதரர் சரத், சிக்கமகளூரு மாவட்டம், மூடிகெரே தாலுகாவின் கென்டேஹள்ளியில் பேக்கரி நடத்துகிறார். தேவராஜு கவுடா, தன் குடும்பத்துடன், மூடிகெரேவில் வசிக்கிறார்.
ரஞ்சிதாவின் தோழிக்கு, மூடிகெரேவின் தேவரமனே கிராமத்தில் திருமண நிச்சயதார்த்தம், நேற்று நடக்கவிருந்தது.
இதில் பங்கேற்பதற்காக, இவர் தன் மற்றொரு தோழி ரேகாவுடன், இரண்டு நாட்களுக்கு முன், மூடிகெரே அருகில் உள்ள ஹாந்தி கிராமத்துக்கு வந்தனர். இங்குள்ள ஹோம்ஸ்டேவில் தங்கியிருந்தனர்.
நேற்று முன்தினம் அதிகாலை, நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு செல்ல வேண்டியிருந்தது.
எனவே ரஞ்சிதா குளிப்பதற்காக சென்றார்; நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. ரேகா கதவை தட்டியும் திறக்கவில்லை.
அவர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது, குழாயில் இருந்து தண்ணீர் பக்கெட்டில் நிரம்பி வழிவதும், ரஞ்சிதா கீழே சுயநினைவின்றி விழுந்து கிடப்பதும் தெரிந்தது.
பீதியடைந்த ரேகா, ஹோம்ஸ்டே ஊழியர்களின் உதவியுடன் கதவை உடைத்து, உள்ளே சென்று ரஞ்சிதாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக கூறினர். இவரது இறப்புக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை.
ஹோம்ஸ்டே குளியல் அறையில், 'காஸ் கீசர்' உள்ளது. அதில் இருந்து காஸ் கசிந்ததால் இறந்திருக்கலாம் என, சந்தேகிக்கப்பட்டது. ஆனால் அங்கு வென்டிலேட்டர் வசதி உள்ளது; கீசரிலும் கசிவு ஏற்படவில்லை. எனவே போலீசார், ரஞ்சிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
அறிக்கை வந்த பின்னரே, இறப்புக்கான காரணம் தெரியும்.
இது குறித்து, அல்துார் போலீஸ் நிலையத்தில், வழக்கு ப திவாகியுள்ளது.

